Published : 12 Aug 2025 07:12 AM
Last Updated : 12 Aug 2025 07:12 AM

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி 

சென்னை: க​ராத்தே பயிற்சி பெற வந்த மாணவி​களுக்கு பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தல் அளித்த பயிற்​சி​யாளர் கெபி​ராஜை சென்னை மகளிர் நீதி​மன்​றம் குற்​ற​வாளி என அறி​வித்து தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை அண்​ணாநகரில் கராத்தே மற்​றும் ஜூடோ போன்ற தற்​காப்​புக் கலைக்​கான பள்​ளியை நடத்தி வந்த கெபி​ராஜ், தனக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்​த​தாக மாணவி ஒரு​வர் கடந்த 2021-ம் ஆண்டு போலீ​ஸில் புகார் அளித்​தார். இதே​போல மேலும் பல மாணவி​கள் அவருக்கு எதி​ராக பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தனர். அதன்​பேரில் அண்​ணாநகர் போலீ​ஸார் கெபி​ராஜ் மீது 5 பிரிவு​களின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்து கைது செய்​தனர்.

பி்ன்​னர் அவர் ஜாமீனி்ல் வெளி​யே வந்​தார். இந்​நிலை​யில், கெபி​ராஜூக்கு எதி​ரான வழக்கு சிபிசிஐடி போலீ​ஸாரின் விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதி​மன்ற நீதிபதி எஸ்​.பத்​மா, குற்​றம் சாட்​டப்​பட்ட கராத்தே மாஸ்​ட​ரான கெபி​ராஜை குற்​ற​வாளி என அறி​வித்து நேற்று தீர்ப்​பளித்​தார். அவருக்​கான தண்​டனை விவரங்​கள் இன்று (ஆக.12) அறிவிக்​கப்​படும் என நீதிப​தி தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x