Published : 12 Aug 2025 06:42 AM
Last Updated : 12 Aug 2025 06:42 AM

கீழே கிடந்ததாக நாடகமாடிய இளைஞர் - மாணவியிடம் குழந்தை ஒப்படைப்பு: போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரச முடிவு

கோப்புப் படம்

சென்னை: குழந்தை கீழே கிடந்ததாக போலீஸில் ஒப்படைத்து நாடகமாடிய இளைஞரும், மாணவியும் அக்குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஓமந்தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு கையில் கட்​டைப்​பை​யுடன் இளைஞர் ஒரு​வர் கடந்த சனிக்​கிழமை வந்​தார்.

அவர் கட்​டைப்​பையை அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸாரிடம் கொடுத்​து, ``நான் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்​தேன். அப்​போது, சாலை​யோரம் கட்​டைப்​பை​யில் வைத்​த​வாறு இந்த குழந்தை கீழே கிடந்​தது'' எனத் தெரி​வித்​தார். இதையடுத்து போலீ​ஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்​தில் கிடந்​தது? எப்​போது பார்த்​தீர்​கள்? எனக் கேள்வி​களை எழுப்ப, இளைஞர் முன்​னுக்​குப் பின் முரணான பதிலளித்​தார்.

சந்​தேகமடைந்த போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர். உடனே, அந்த இளைஞர் `மன்​னித்து விடுங்​கள். இந்தகுழந்தை எனக்கு பிறந்​தது​தான். உங்​களிடம் பொய் சொல்​லி​விட்​டேன்' எனக்​கூறி கதறி அழு​தார். மேலும் அந்த இளைஞர் போலீ​ஸாரிடம் கூறுகை​யில், ``என் பெயர் பிர​வீன்​(21).

ஊட்​டி​யில் உள்ள கல்​லூரி​யில் படித்​த ​போது, அதே கல்​லூரி​யில் படித்த சேலத்​தைச் சேர்ந்த 21 வயது மாண​வி​யுடன் பழக்​கம் ஏற்பட்டு இரு​வரும் காதலித்து வந்​தோம். பின்​னர் நான் அரசு வேலைக்​காக சென்னை சைதாப்​பேட்​டை​யில் தங்கி குரூப்-1 தேர்வுக்குத் தயா​ராகி வரு​கிறேன்.

மாண​வி, கிண்​டி​யில் உள்ள விடு​தி​யில் தங்கி சென்னை பல்​கலைக்​கழகத்​தில் எம்​எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வரு​கிறார். சென்​னை​யில் இருந்​த​தால், நாங்​கள் இரு​வரும் அடிக்​கடி தனிமை​யில் சந்​தித்து வந்​தோம். இதனால் மாணவி கர்ப்​பமடைந்​தார். இந்​நிலை​யில், கடந்த 8-ம் தேதி விடு​தி​யில் இருந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்​பட்​டது.

மாண​வி​யின் தோழிகள் விடு​முறைக்கு ஊருக்கு சென்​ற​தால், விடுதி கழிப்​பறை​யிலேயே மாணவி குழந்​தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து குழந்​தை​யுடன் நானும், மாண​வி​யும் திரு​வல்​லிக்​கேணி​யில் தனி​யாக அறை எடுத்து தங்கி யோசித்​தோம். குழந்தை பிறந்த விவ​காரம் வெளியே தெரிந்​தால் இரு குடும்​பத்​தினரும் கோபப்​படு​வார்​கள். குழந்​தையை வளர்க்க​வும் வசதி இல்​லை. மேலும் குழந்​தையை கொலை செய்​ய​வும் மனம் வரவில்​லை.

அப்​போது​தான் குழந்தை சாலை​யோரம் கிடந்​த​தாக நாடக​மாடி போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​து​விட்​டால் அவர்​கள் வளர்க்க தகுந்த நடவடிக்கை எடுப்​பார்​கள் என முடிவு செய்​தோம். அதன்​படி திட்​டத்தை செயல்​படுத்​தினோம். ஆனால், விசா​ரணை​யில் அனைத்து உண்​மை​களும் வெளிவந்​து​விட்​டது'' என போலீ​ஸாரிடம் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, ஏழரை மாதத்​தில் பிறந்த அந்த குழந்​தைக்கு மருத்​துவ சிகிச்சை அளிக்க போலீ​ஸார் ஏற்​பாடு செய்​தனர். அதோடு மட்​டுமல்​லாமல் இருதரப்பு பெற்​றோரை​யும் நேரில் வரவழைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

மேலும் சம்​பந்​தப்​பட்ட இளைஞர், மாண​வி​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதையடுத்து குழந்​தையை வளர்க்க இரு​வரும் ஒப்​புக்​கொண்​டனர். அதோடு மட்​டுமல்​லாமல் அவர்​களது பெற்​றோர் தரப்​பும் ஒப்​புக்​கொண்​டனர். இதையடுத்து குழந்தை பெற்​றோரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இது ஒரு​புறம் இருக்க இரு​வருக்​கும் முறைப்​படி திரு​மணம் செய்​து வைக்​க இருதரப்​பு பெற்​றோரும்​ முடிவு செய்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x