Published : 11 Aug 2025 06:50 AM
Last Updated : 11 Aug 2025 06:50 AM

ராமேசுவரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு பறிமுதல்

ராமேசுவரம்: ராம​நாத​புரம் மாவட்​டம் ராமேசுவரம் அரு​கே​யுள்ள வேதாளை கடற்​கரை​யில் மெரைன் போலீ​ஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது போலீ​ஸாரை பார்த்​தும் சரக்கு வாக​னம் ஒன்றை கடற்​கரை​யில் நிறுத்​தி​விட்​டு, அதில் இருந்​தவர்​கள் தப்பி ஓடினர்.

சரக்கு வாக​னத்தை போலீ​ஸார் சோதனை​யிட்​ட​தில், 35 மூட்​டைகளில் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்​சி) இருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, வாக​னத்​தை​யும், சுக்​கு​வை​யும் பறி​முதல் செய்த மெரைன் போலீ​ஸார், அவற்றை சுங்​கத் துறையினரிடம் ஒப்​படைத்​தனர்.

முதல்​கட்ட விசா​ரணை​யில், இலங்​கைக்கு நாட்​டுப் படகில் கடத்​திச் செல்​வதற்​காக சரக்கு வாக​னத்​தில் சுக்கு கொண்டு வரப்பட்டது தெரிய​வந்​தது. இதையடுத்​து, சரக்கு வாக​ன உரிமை​யாளர் யார், தப்பி ஓடியவர்​கள் யார் என்று போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x