Published : 11 Aug 2025 06:14 AM
Last Updated : 11 Aug 2025 06:14 AM

நெல்லை அருகே ஆய்வுக்கு சென்றபோது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: மகளிர் திட்ட இயக்குநர் மீது வழக்கு

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் மகளிர் திட்ட இயக்​குந​ராகப் பணிபுரிந்து வருபவர் இலக்​கு​வன். இவர் கடந்த மாதம் களக்​காடு ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கத்​துக்கு ஆய்​வுக்கு சென்​றுள்​ளார். அந்த அலு​வல​கத்​தில் தொகுப்பூதியத்தில் பணிபுரி​யும் இளம்​பெண்​ணின் அறை​யில் ஆவணங்​களை ஆய்வு செய்​துள்​ளார்.

அப்​போது, அந்​தப் பெண்​ணின் குடும்ப சூழ்​நிலை குறித்து விசா​ரித்த இலக்​கு​வன், அவரது மேல் படிப்​புக்கு உதவுவ​தாக கூறியுள்ளார். பின்​னர், வேறொரு அறைக்கு அவரை அழைத்​துச் சென்​று, பாலியல் ரீதி​யாக தொல்லை கொடுத்​த​தாக கூறப்படுகிறது. உடனடி​யாக அங்​கிருந்து அந்​தப் பெண் வெளி​யேறி​யுள்​ளார்.

‘இதுகுறித்து யாரிட​மும் சொல்ல வேண்​டாம்’ என்று கூறி​விட்​டு, இலக்​கு​வன் அங்​கிருந்து சென்​று​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்​தப் பெண் அவரது பெற்​றோரிடம் கூறி​யுள்​ளார். தொடர்ந்​து, நாங்​குநேரி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​பேரில், இலக்​கு​வன் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x