Published : 10 Aug 2025 12:55 AM
Last Updated : 10 Aug 2025 12:55 AM

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் பரிதாப உயிரிழப்பு - நடந்தது என்ன?

சாத்தூர்: ​​விருதுநகர் மாவட்​டம் சாத்தூர் அருகே வெம்​பக்​கோட்டை பகுதியில் சட்​ட​விரோத​மாக வீட்​டில் பட்​டாசு தயாரித்​த​போது ஏற்​பட்ட வெடி விபத்​தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர்.

வெம்​பக்​கோட்டை அரு​கே​யுள்ள விஜயகரிசல்​குளம் கிழக்​குத் தெருவை சேர்ந்​தவர் பொன்​னு​பாண்​டியன். இவரது வீட்​டில் சட்​ட​விரோத​மாக பட்​டாசு தயாரிக்​கும் பணி நடை​பெற்​றது. நேற்று தொழிலா​ளர்​கள் சிலர் பணி​யில் இருந்​த​போது மின்​கசிவு ஏற்​பட்டு தீப்​பற்​றிய​தில் பட்​டாசுகள் வெடித்​துச் சிதறின. பட்​டாசு தயாரிப்​பில் ஈடு​பட்​டிருந்த கீழகோ​தை​நாச்​சி​யாபுரம் பகு​தி​யைச் சேர்ந்த ஜெகதீஸ்​வரன் (18), விஜயகரிசல்​குளத்​தைச் சேர்ந்த முத்​துலட்​சுமி (70), சண்​முகத்​தாய் (60) ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். அப்​பகு​தி​யைச் சேர்ந்த மாரி​யம்​மாள் (55) என்​பவர் பலத்த காயமடைந்​தார். தகவலறிந்து வந்த வெம்​பக்​கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்​கள் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

உயி​ரிழந்த 3 பேரின் உடல்​கள் மீட்​கப்​பட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சிவ​காசி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன. காயமடைந்த மாரி​யம்​மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. விபத்து தொடர்​பாக வெம்​பக்​கோட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, வீட்​டின் உரிமை​யாளர் பொன்​னு​பாண்​டியனை கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

ரூ.4 லட்சம் நிவாரணம்: ​முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “பட்​டாசு வெடி விபத்​தில் 3 பேர் உயி​ரிழந்தசெய்​தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பலத்த காயமடைந்​து, அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வரும் மாரியம்​மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின்குடும்​பத்​தினருக்​கும், உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.உயிரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்​சம், பலத்த காயமடைந்​தவருக்கு ரூ.1 லட்​சம் வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x