Published : 09 Aug 2025 06:34 AM
Last Updated : 09 Aug 2025 06:34 AM

தூத்துக்குடி | பூசாரி கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் கோயில் பூசாரி வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சிறு​வன் உள்​ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்​டனர். தூத்​துக்​குடி தாள​முத்​துநகர் ஆ.சண்​முகபுரத்தை சேர்ந்த மூக்​காண்டி மகன் ரவி (38). இவர் தூத்​துக்​குடி 3-ம் மைல் மடத்​தூர் சாலை​யில் உள்ள பேச்​சி​யம்​மன் கோயி​லில் பூசா​ரி​யாகப் பணி​யாற்றி வந்​தார்.

ஏரல் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு பெண்​ணுக்​கும், ரவிக்​கும் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண்​ணுக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி, ஒரு மகன், 2 மகள்​கள் உள்​ளனர். அப்​பெண் தனது கணவர் மற்​றும் மகனைப் பிரிந்​து, 2 மகள்​களு​டன் ரவி​யுடன்வாழ்ந்து வந்​தார்.

இவர்​கள் ஆ.சண்​முகபுரத்​தில் வாடகைக்கு வீடு எடுத்​து, கடந்த 4 ஆண்​டு​களாக வசித்து வந்​தனர்.அந்​தப் பெண்​ணின் மகன் தனியார் பொறி​யியல் கல்​லூரி​யில் முதலா​மாண்டு படித்து வந்​தார். தனது தந்தை தனி​யாக கஷ்டப்​படு ​வதை பார்த்து மிக​வும் வேதனை அடைந்​துள்​ளார். இதனால், தனது தாய் மற்​றும் சகோ​தரி​களை தங்​கள் குடும்​பத்​தில் இருந்து பிரித்​துச் சென்ற ரவியை கொலை செய்​யத் திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சோட்​டையன்​தோப்பு பகு​தி​யில் உள்ள கடைக்கு ரவி சென்​றார். அப்​போது, மோட்​டார் சைக்​கிளில் வந்த அந்​தப் பெண்​ணின் 17 வயது மகன் மற்​றும் அவரது உறவினர் ஆகியோர் ரவியை அரி​வாளால் வெட்​டினர்.

இதில் பலத்த காயமடைந்த ரவி, அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். தகவலறிந்து வந்த போலீ​ஸார் ரவி​யின் சடலத்தை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி​வைத்​தனர்.

இது தொடர்​பாக ஏஎஸ்பி மதன் மற்​றும் தாள ​முத்​துநகர் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, ரவி​யுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்​ணின் 17 வயது மகன் மற்​றும் அவரது உறவினரை கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x