Published : 09 Aug 2025 06:31 AM
Last Updated : 09 Aug 2025 06:31 AM

சின்னசேலம் அருகே பைக் - லாரி மோதலில் 3 பேர் உயிரிழப்பு 

கள்ளக்குறிச்சி: சின்​ன​சேலம் அருகே பைக் மீது லாரி மோதி​ய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் அடுத்த நாகுப்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் தங்​க​ராசு மகன் தினேஷ் (25), அய்​யம்​பெரு​மாள் மகன் வெங்​கடேசன் (26), பழனி​சாமி மகன் சிவசக்தி (25). தினேஷ் பஞ்​சர் கடை நடத்தி வந்​தார். வெங்​கடேசன், சிவசக்தி ஆகியோர் லாரி ஓட்​டுநர்​கள்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு மூவரும் பைக்​கில் சின்​ன​சேலம் புறவழிச்​சாலை வழி​யாக அம்​மையகரம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தனர். சின்​ன​சேலம் ரயில்வே மேம்​பாலத்​தில் வந்​த​போது, அவ்​வழியே வந்த சரக்கு லாரி எதிர்​பா​ராத​வித​மாக பைக் மீது மோதி​யது.

இந்த விபத்​தில் தினேஷ், வெங்​கடேசன், சிவசக்தி ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். தகவலறிந்த சின்​ன​சேலம் போலீ​ஸார் 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக கள்​ளக்​குறிச்சி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், விபத்து குறித்து விசா​ரணை நடத்தி வருகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x