Published : 08 Aug 2025 06:25 AM
Last Updated : 08 Aug 2025 06:25 AM

போலியான நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி: வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது

கைது செய்யப்பட்ட வங்கி மேலாளர் சரவணன் மற்றும் ஜானகிராமன்.

சென்னை: வங்​கி​யில் போலி​யான நகைகளை அடமானம் வைத்​து, ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்​கில், மேலா​ளர் உள்பட இருவர் கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை, அண்ணா சாலை​யில் உள்ள கனரா வங்​கி​யின் துணை மேலா​ள​ராக இருப்பவர் எடுப்​பலபட்டி விஜய சங்​கர். இவர், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் ஒன்று அளித்​திருந்​தார்.

அதில், ‘வங்​கி​யில் அடமானம் வைக்​கப்​பட்​டிருந்த நகைகள் ஆய்வு செய்​யப்​பட்​டது. அதில், 21 தங்க நகைக் கடன்களில் போலி தங்க நகைகளை அடமான​மாக வைத்து ரூ.2.38 கோடி பெறப்​பட்​டிருந்​தது தெரிய வந்​தது. இந்த மோசடிக்கு வங்​கி​யில் பணி செய்து வந்த சிலர் துணை​யாக இருந்​துள்​ளனர். அவர்​களை அடை​யாளம் கண்டு கைது செய்ய வேண்​டும்.மேலும், போலி நகைகளை அடமான​மாக வைத்து பெறப்​பட்ட பணத்தை மீட்​டுத் தர வேண்​டும்’ என புகாரில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

உரிய விசா​ரணை... இது குறித்​து, உரிய விசா​ரணை நடத்த காவல் ஆணை​யர் அருண் உத்தர​விட்டார். அதன்​படி, சென்னை மத்​திய குற்​றப் பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் ராதிகா மேற்​பார்​வை​யில், வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

இதில், இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் நகை மதிப்​பீட்​டாள​ராக​ இருந்த சிந்​தா​திரிப்​பேட்டை சரவணன் (42), மற்​றும் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்ற சைதாப்​பேட்டை ஆலந்​தூர் சாலை பகுதி​யைச் சேர்ந்த ஜானகி ராமன் (39) ஆகிய இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x