Published : 08 Aug 2025 12:20 AM
Last Updated : 08 Aug 2025 12:20 AM

உடுமலை எஸ்.ஐ. கொலையில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?

எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல், மணிகண்டன்

உடுமலை / திருப்பூர்: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்​வாளரை வெட்​டிக் கொன்ற வழக்​கில் தொடர்​புடைய குற்​ற​வாளியை போலீ​ஸார் நேற்று என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொன்​றனர்.

சிக்​க​னூத்து பகு​தி​யில் மடத்​துக்​குளம் அதி​முக எம்​எல்ஏ மகேந்​திரனுக்​குச் சொந்​த​மான தென்​னந்​தோப்பு உள்​ளது. அங்கு திண்​டுக்​கல் மாவட்​டம் வேடசந்​தூரைச் சேர்ந்த மூர்த்​தி(62), அவரது மகன் தங்​க​பாண்​டி(30) மற்​றும் குடும்​பத்​தினர் தங்​கி​யிருந்து பணி​யாற்றி வந்​தனர். கடந்த 5-ம் தேதி இரவு மூர்த்​தியை பார்க்க அவரது மற்​றொரு மகன் மணி​கண்​டன்​(32), தனது குடும்​பத்​துடன் வந்​துள்​ளார். அப்​போது மூர்த்​தி, மகன்​கள் தங்​க​பாண்​டி, மணி​கண்​டன் ஆகியோர் மது அருந்​தி​யுள்​ளனர். திடீரென அவர்​களிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தோட்ட மேலா​ளர் அளித்த தகவலின் பேரில், அப்​பகு​தி​யில் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த குடிமங்​கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்​வாளர் (எஸ்​எஸ்ஐ) சண்​முகவேல்​(58), காவலர் அழகு​ராஜா(32) ஆகியோர் சிக்​க​னூத்​தில் உள்ள தோட்​டத்​துக்கு நள்​ளிரவு சென்​றனர். மூவரிட​மும் விசா​ரித்து விட்​டு, மகன்​கள் தாக்​கிய​தில் காயமடைந்த மூர்த்​தியை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்ப எஸ்​எஸ்ஐ சண்​முகவேல் ஏற்​பாடு செய்து கொண்​டிருந்​தார். இதில் ஆத்​திரமடைந்த மணி​கண்​டன் உள்​ளிட்ட மூவரும் அரி​வாளால் எஸ்​எஸ்ஐ சண்​முகவேலை தலை உள்​ளிட்ட இடங்​களில் சரமாரி​யாக வெட்​டினர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். தடுக்க முயன்ற காவலர் அழகு​ராஜா மற்​றும் தோட்ட மேலா​ளர் ஆகியோரை​யும் தாக்​கி​னர். பின்​னர் மூவரும் அங்​கிருந்து தப்​பியோடினர்.

இதுதொடர்​பாக காவலர் அழகு​ராஜா அளித்த தகவலின்பேரில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார், கோவை சரக டிஐஜி சசிமோகன், எஸ்​.பி. கிரிஸ் யாதவ் உள்​ளிட்​டோர் சம்பவ இடத்​துக்கு வந்து விசா​ரித்​தனர். இதற்​கிடை​யில், தலைமறை​வாக இருந்த மூர்த்​தி, தங்​க​பாண்டி ஆகியோர் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​யப்​பட்​டனர். பின்​னர், முக்​கிய குற்​ற​வாளி மணி​கண்​டன் போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். இந்​நிலை​யில், எஸ்​எஸ்ஐ சண்​முகவேலை கொலை செய்​யப் பயன்​படுத்​திய அரி​வாளை மறைத்து வைத்​திருக்​கும் இடத்தை காண்​பிப்​ப​தாக மணி​கண்​டன் போலீ​ஸாரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்​து, காவல் ஆய்​வாளர் திரு​ஞானசம்​பந்​தம், உதவி ஆய்​வாளர் சரவணகு​மார் மற்​றும் போலீ​ஸார், சிக்​க​னூத்​துக்கு ஒரு கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள உப்​பாறு ஓடை பகு​திக்கு நேற்று அதி​காலை மணி​கண்​டனை அழைத்​துச் சென்​றனர். மறைத்து வைத்​திருந்த அரி​வாளை எடுத்த மணி​கண்​டன், எதிர்​பா​ராத​வித​மாக எஸ்​.ஐ. சரவணகு​மாரை வெட்​டி​யுள்​ளார். மற்ற போலீ​ஸாரை​யும் வெட்ட முயன்​றுள்​ளார்.

அப்​போது தற்​காப்​புக்​காக ஆய்​வாளர் திரு​ஞானசம்​பந்​தம் தனது துப்​பாக்​கி​யால் மணி​கண்​டனை சுட்​டார். இதில் பலத்த காயமடைந்த மணி​கண்​டன், அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார். காயமடைந்த எஸ்​.ஐ. சரவணகு​மார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். மணி​கண்​டனின் உடல் பிரேதப் பரிசோதனைக்​காக திருப்​பூர் அரசு மருத்​து​வக் கல்​லூரிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்ட மணி​கண்​டன் மீது திண்​டுக்​கல் மாவட்​டம் வடமதுரை, எரியோடு, தேனி மாவட்​டம் தேவ​தானப்​பட்டி காவல் நிலை​யங்​களில் கொலை முயற்​சி, கொலை மிரட்​டல், வழிப்​பறி, திருட்டு உள்​ளிட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, மேற்கு மண்டல ஐ.ஜி. செந்​தில்​கு​மார், எஸ்​.பி. கிரிஸ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்​தில் ஆய்வு மேற்​கொண்​டனர். ஏற்​கெனவே கைது செய்யப்​பட்​டிருந்த மூர்த்​தி, தங்​க​பாண்டி ஆகியோர் உடுமலை மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டு, பின்​னர் கோவை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x