Published : 07 Aug 2025 07:57 AM
Last Updated : 07 Aug 2025 07:57 AM

சென்னை | தொழில் அதிபரை மயக்கி நகைகள் திருட்டு: இளம்​பெண் நண்பருடன் கைது

தீபலட்​சுமி, சதிஷ்கு​மார்

சென்னை: தொழில் அதிபரை மயக்கி நகைகளைத் திருடிய இளம்​பெண் கூட்​டாளி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, ஆவடி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மணி. தொழில் அதிப​ரான இவர் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி, பெண் தோழி ஒருவருடன் தேனாம்​பேட்​டை​யில் உள்ள ஓர் ஓட்​டலில் அறை எடுத்து தங்​கி​னார். மறு​நாள் காலை எழுந்து பார்த்​த​போது, அந்த பெண்ணை​யும் காண​வில்​லை. அவர் அணிந்​திருந்த 10 பவுன் தங்​கச் சங்​கி​லியை​யும் காண​வில்​லை.

அதி​களவு மது ஊற்​றிக் கொடுத்து மயங்க வைத்​து, தங்​கச் சங்​கி​லியை அந்​தப் பெண் திருடிச் சென்​றது அவருக்​குத் தெரிய​வந்​தது. இதுகுறித்​து, தேனாம்​பேட்டை காவல் நிலை​யத்​தில் மணி புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்தனர்.

இதில், தப்பி ஓடியது குன்​றத்​தூர் சிவன்​தாங்​கல் பகு​தி​யில் வசித்​து​வரும் தீபிகா என்ற தீபலட்​சுமி (22) என்​பது தெரிய​வந்​தது. இவர், தனது கூட்​டாளி​யான மேற்​கு ​மாம்​பலத்​தைச் சேர்ந்த சதிஷ்கு​மார்​(23) என்​பவருடன் சேர்ந்​து, பல தொழில் அதிபர்​களிடம் இதே​ பாணி​யில் திருடியது தெரிய வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த இரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருட்டு நகையை விற்​று, அதன்​மூலம் கிடைத்த பணத்​தில் இருசக்கர வாக​னம் வாங்​கி​யுள்​ளனர். வாக​னத்​தை​யும், ரூ.3.14 லட்​சம் பணத்​தை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பின்​னர், அவர்​களை நீதி​மன்​றக் காவலில்​ புழல்​ சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x