Published : 06 Aug 2025 06:46 AM
Last Updated : 06 Aug 2025 06:46 AM

செங்குன்றம் | இளைஞரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட வழக்கில் 2 பேர் கைது

செங்குன்றம்: திரு​வள்​ளூர் மாவட்​டம், செங்​குன்​றம் அருகே உள்ள விளாங்​காட்டை அடுத்த மல்​லிமா நகர் பகு​தி​யில் உள்ள கால்பந்து மைதானத்​தில் இளைஞர் ஒரு​வரின் உடல், மரத்​தில் தொங்​கிய நிலை​யில் இருப்​ப​தாக நேற்று முன் தினம் காலை செங்குன்​றம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, சம்பவ இடம் விரைந்த செங்​குன்​றம் போலீ​ஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். அதில், உயிரிழந்த இளைஞர், பெரிய​பாளை​யம் அருகே உள்ள நெய்​வேலி பகு​தியை சேர்ந்த ராஜேஷ் (19) என்​பதும், நள்​ளிர​வில் நண்​பர்​கள் சேர்ந்து மது அருந்​தும்​போது ஏற்​பட்ட தகராறில் ராஜேஷ் கொலை செய்​யப்​பட்​டதும் தெரிய வந்​தது.

இதுதொடர்​பாக போலீ​ஸார், நிலு​வை​யில் உள்ள செங்​குன்​றம் உள்​ளிட்ட காவல் நிலைய எல்​லைகளில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்​புடைய. மல்​லிமா நகரை சேர்ந்த சந்​தோஷ் (22), பொன்​னேரி பகு​தியை சேர்ந்த இளம்​பரிதி (22) ஆகிய இருவரை நேற்று கைது செய்​தனர். நண்​பர்​களான ராஜேஷ், சந்​தோஷ், இளம்​பரிதி ஆகியோர், நண்​பர்​கள் தின​மான கடந்த 3-ம் தேதி இரவு, மல்​லிமா நகர், கால்​பந்து மைதான பகு​தி​யில் மது அருந்​தி​யுள்​ளனர்.

அப்​போது, அவர்​களுக்கு இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. அதன் காரண​மாக, சந்​தோஷ், இளம்​பரிதி ஆகியோர், கத்தி உள்ளிட்டவற்​றால், ராஜேஷை கடுமை​யாக தாக்கி கொலை செய்​து​விட்​டு, மரத்​தில் தொங்​க​விட்​டுள்​ளனர் என கைதானவர்​களிடம் போலீஸார் நடத்​திய வி​சா​ரணை​யில் தெரிய வந்​த​தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x