Published : 06 Aug 2025 05:29 AM
Last Updated : 06 Aug 2025 05:29 AM

​போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்​சம் மோசடி செய்த தம்​பதி கைது

சென்னை: ராயபுரத்​தில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்​சம் மோசடி செய்​த​தாக, தம்​ப​தி​யர் கைது செய்யப்பட்​டனர். சென்னை பெரியமேடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் விமல்​கு​மார் (57). ராயபுரம் ஆடு தொட்டி பகு​தி​யில் நகை அடமானக் கடை நடத்தி வரு​கிறார். இவர் ராயபுரம் காவல் நிலை​யத்​தில் அண்​மை​யில் புகார் ஒன்றை அளித்​தார்.

அதில், ‘‘ராயபுரம் ஆஞ்​சநேயர் நகர் 6-வது தெரு​வைச் சேர்ந்த சீனி​வாசலு (60), அவர் மனைவி அம்​சலட்​சுமி (57) ஆகிய 2 பேரும் சேர்ந்து கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் 20-ம் தேதி 196 கிராம் எடை​யுள்ள நகைகளை அடமானம் வைத்து ரூ.10.76 லட்​சம் கடன் பெற்றனர்.

ஆபாசமாக பேசி மிரட்டல்: சில தினங்​களுக்கு பின்​னர் அவர்​கள் கொடுத்த தங்க நகையை சோதனைக்கு உட்​படுத்​தி​ய​போது, அது போலி​யானது என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து இரு​வரிட​மும் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யில் 6 மாதங்​களில் கடன் தொகையை திருப்​பித் தந்​து​விடு​வ​தாக, ரூ.100 பத்​திரத்​தில் எழு​தித் தந்​தனர். 6 மாதம் கடந்த நிலை​யில், அவர்​கள் பணத்தை திருப்​பித் தரவில்​லை.

பணத்தை நான் கேட்​ட​போது, என்னை ஆபாச​மாகப் பேசி மிரட்​டல் விடுத்து வரு​கின்​றனர். எனவே அவர்​கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்​டுத் தர வேண்​டும்” என்று புகாரில் குறிப்​பிட்டு இருந்​தார். அப்​பு​காரின் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசாரணை மேற்​கொண்​டனர். விசா​ரணை​யில் சீனி​வாசலு​வும், அவரது மனைவி அம்​சலட்​சுமி​யும் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் மோசடி​யில் ஈடு​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x