Published : 03 Aug 2025 06:55 AM
Last Updated : 03 Aug 2025 06:55 AM

​​​​​​​சிவகங்கை திமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதானவரின் தந்தை தேவகோட்டை அருகே கொலை

சிவகங்கை: ​தி​முக நிர்​வாகி கொலை வழக்​கில் கைதானவரின் தந்​தையை மர்ம கும்​பல் தேவகோட்டை அருகே வெட்​டிக் கொலை செய்​தது.

சிவகங்கை அரு​கே​யுள்ள சாமி​யார்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​வீன்​கு​மார் (27). திமுக விளை​யாட்டு மேம்​பாட்​டுப் பிரிவு மாவட்ட துணை அமைப்​பாள​ராக இருந்​தார். கடந்த ஏப். 27-ம் தேதி தோட்​டத்​தில் இருந்த அவரை முன்​விரோதம் காரண​மாக அதே பகு​தி​யைச் சேர்ந்த விக்​கி, தனது நண்​பர்​களான சிவகங்கை காள​வாசல் பிர​பாகரன், திருப்​பத்​தூர் நரசிங்​கபுரம் குரு ஆகியோ​ருடன் சேர்ந்து வெட்​டிக் கொலை செய்​தார். இது தொடர்​பாக சிவகங்கை நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, மூவரை​யும் கைது செய்​தனர்.

இதையடுத்​து, சாமி​யார்​பட்​டியை விட்டு வெளி​யேறிய விக்​கி​யின் தந்தை கருப்​பை​யா(60), தனது மனைவி விமலா​வுடன் தேவகோட்டை அருகே திரு​வேகம்​பத்​தூர் விலாங்​காட்​டூர் பகு​தி​யில் வசித்து வந்தார். இந்​நிலை​யில், அப்​பகு​தி​யில் நேற்று ஆடு மேய்த்து கொண்​டிருந்த கருப்​பை​யாவை 3 பேர் கொண்ட கும்​பல் வெட்​டிக் கொலை செய்​தது. தகவலறிந்து வந்த போலீ​ஸார், கருப்​பையா சடலத்தை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். இதுகுறித்து தேவகோட்டை டிஎஸ்பி கவுதம் மற்​றும் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

இந்த கொலை பழிக்​குப் பழி​யாக நடந்​ததா அல்​லது வேறு ஏதேனும் காரணம் உள்​ளதா என்று போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். மேலும், குற்​ற​வாளி​களைப் பிடிக்க 3 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x