Published : 02 Aug 2025 06:21 AM
Last Updated : 02 Aug 2025 06:21 AM

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு சைபர் க்ரைம் கும்பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது

சென்னை: சைபர் க்ரைம் மோசடி கும்​பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் சல்​மான் சலீம் (29). இவர் நிறு​வனம் ஒன்றை நடத்தி வரு​கிறார். சைபர் மோசடி கும்​பல் இவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.17 லட்​சம் பெற்று மோசடி செய்​துள்​ளது. சல்​மான் சலீம் இதுதொடர்​பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டதில், அவர் அனுப்​பிய பணம் விருதுநகர் மாவட்​டம், சிவ​காசி லட்​சுமிபுரத்​தைச் சேர்ந்த புஷ்பா (35) மற்​றும் அவரது கணவர் சதுரகிரி (41) ஆகியோரின் வங்​கிக் கணக்​கு​களுக்கு சென்​றது தெரிய​வந்​தது. அந்த பணத்தை அவர்​கள் காசோலை மூலம் எடுத்​திருந்​ததும் தெரிய​வந்​தது.

இதையறிந்த போலீ​ஸார் விருதுநகர் சென்று இரு​வரை​யும் கைது செய்​தனர். விசா​ரணை​யில், ஃபேஸ்​புக் மூலம் புஷ்​பாவை அமெரிக்​காவைச் சேர்ந்த கிறிஸ் ஓட்டோ என்ற நபர் தொடர்பு கொண்​டுள்​ளார். அவர், தான் சொன்​னபடி நடந்​து​ கொண்​டால் பல கோடி ரூபாய் மதிப்​பிலான பரிசுப் பொருட்​களை அனுப்பி வைப்​ப​தாக ஆசை​வார்த்தை கூறி​யுள்​ளார். இதை கணவரிட​ம் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து அமெரிக்க நபர் கூறியபடி 3 வங்​கிக் கணக்​கு​களை புஷ்பா மற்​றும் சதுரகிரி தொடங்​கினர். அந்த வங்​கிக் கணக்​குக்கு அனுப்​பப்​படும் பணத்தை எடுத்​து, கிறிஸ் ஓட்டோ கூறிய பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களுக்கு அனுப்பி வைத்​துள்​ளனர். இப்​படி தங்​கள் கணக்​குக்கு அனுப்​பப்​பட்ட ரூ.17 லட்​சத்​தில், ரூ.3 லட்​சத்து 67 ஆயிரத்தை கமிஷ​னாக வைத்​துக் கொண்டு மீத​முள்ள பணத்தை அனுப்பி வைத்​தனர்.

அந்த மோசடி கும்பல், அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த சல்​மான் சலீம் என்​பவரை புஷ்பா வங்​கிக்கணக்​குக்கு பணம் அனுப்ப வைத்​து, அந்த பணத்தை புஷ்பா மூலம் பெற்​றதும் தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக உள்ள சைபர் க்ரைம் மோசடி கும்​பலை தனிப்​படை அமைத்து போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x