Published : 02 Aug 2025 06:16 AM
Last Updated : 02 Aug 2025 06:16 AM

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் சஸ்பெண்ட்

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அருகே மேல்​குரு​மலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்த பழங்​குடி விவ​சாயி மாரி​முத்து (45). கேரள மாநிலம் மறையூரில் பெட்​டிக்​கடை நடத்தி வந்​தார். கடந்த 30-ம் தேதி சின்​னாறு வன சோதனைச்​சாவடி​யில் இவரைப் பிடித்​துச் சென்ற வனத் துறை​யினர், உடுமலை வனச் சரக அலு​வல​கத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

இந்​நிலை​யில், அங்கு கழி​வறை​யில் தூக்​கிட்ட நிலை​யில் மாரி​முத்து இறந்து கிடந்​தார். அவர் தற்​கொலை செய்து கொண்​ட​தாக வனத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

ஆ​னால், வனத் துறை​யினர் அடித்​துக் கொலை செய்​து​ விட்​ட​தாகக் கூறி போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், உடுமலை வனத் துறை​யில் பணி​யாற்​றும் வனவர் நிமல்​கு​மார், வனக்​காவலர் செந்​தில்​கு​மார் ஆகியோர் தற்​காலிக பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக வனத் துறையினர் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x