Published : 31 Jul 2025 06:01 AM
Last Updated : 31 Jul 2025 06:01 AM

நெல்லையில் ஐ.டி. ஊழியர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சுர்ஜித்

திருநெல்வேலி: நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித், குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வகணேஷின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

காவல்​துறை மீது புகார்: இதுகுறித்து வழக்​கறிஞர் செல்​வம் கூறும்​போது, “முதல் தகவல் அறிக்கை அடிப்​படை​யில் உதவி ஆய்​வாளர்​கள் இரு​வரை​யும் கைது செய்​ய​லாம். ஆனால், காவல் துறை அவர்​களைக் கைது செய்ய மறுக்​கிறது. அவர்​களைக் கைது செய்​தால் மட்​டுமே, உடலை வாங்கி அடக்​கம் செய்​வோம்” என்​றார்.

இதற்​கிடை​யே, கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித்தை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்க மாநகர காவல் ஆணை​யர் நேற்று உத்​தர​விட்​டார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்​தரவிட்​டுள்​ளது. இது தொடர்​பாக டிஜிபி அலு​வல​கம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், “கவின் செல்​வகணேஷ் கொலை தொடர்​பாக வன்கொடுமை தடுப்பு சட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களில் குற்​றம் சாட்​டப்​பட்ட சுர்​ஜித், அவரது தந்தை சரவணன், தாயார் கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கவின் செல்​வகணேஷும், சுர்​ஜித்​தின் சகோ​தரி​யும் பழகி வந்​துள்​ளனர். இது தொடர்​பான பிரச்​சினை​யில் கொலை நடந்​துள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இவ்​வழக்​கின் தன்மை மற்​றும் முக்​கி​யத்​து​வத்தை கருத்​தில் கொண்​டும், சுதந்​திர​மான, நியாய​மான மற்​றும் பாரபட்​சமற்ற விசா​ரணையை உறுதி செய்​வதற்​காக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்​றப்​பட்​டுள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x