Published : 30 Jul 2025 06:24 AM
Last Updated : 30 Jul 2025 06:24 AM

சென்னை | போதைக்காக வலி நிவாரண மாத்திரை விற்ற தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை: ​மும்​பையி​லிருந்து சென்​னைக்கு கடத்தி வந்து போதைக்​காக, வலி நிவாரண மாத்​திரைகள் விற்​பனை செய்​த​தாக, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். கொடுங்​கையூர் போலீ​ஸார் நேற்​று ​முன்​தினம், கொடுங்​கையூர், டி.எச்.ரோடு மற்​றும் தொப்பை விநாயகர் கோயில் சந்​திப்பு அருகே கண்​காணித்​தனர். அப்​போது, அங்கு நின்று கொண்​டிருந்த 3 பேரிடம் விசாரித்​தனர்.

அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதிலளித்​தனர். இதையடுத்​து, அவர்​கள் வைத்​திருந்த பிளாஸ்​டிக் பையை சோதனை செய்த போது, அதில் 400 வலி நிவாரண மாத்​திரைகள் இருந்​தன. அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார், அதை வைத்​திருந்த கொடுங்​கையூர் விக்​னேஷ் என்ற விக்கி (25), அவரது தாய் மேனகா (42), கொருக்​குப்​பேட்டை தினகரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட விக்​னேஷ் மும்​பையி​லிருந்து வலி நிவாரண மாத்​திரைகளை வாங்கி வந்​து, சென்​னை​யில் அவரது தாய் மற்றும் தினகரனுடன் சேர்ந்து விற்​றது தெரிய வந்​தது. கைது செய்​யப்​பட்ட 3 பேரும் நீதி​மன்றக் காவலில்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x