Published : 28 Jul 2025 06:21 AM
Last Updated : 28 Jul 2025 06:21 AM

சென்னை | தொழிலில் முதலீடு செய்தால்  லாபத்தில் பங்கு தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: பழைய ஸ்கேன் இயந்​திரம் வாங்கி விற்​கும் தொழிலில் முதலீடு செய்​தால் லாபத்​தில் பங்கு தரு​வ​தாக ரூ.15 லட்​சம் மோசடி செய்த தனி​யார் நிறுவன உரிமை​யாளர் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, சேத்​துப்​பட்​டைச் சேர்ந்​தவர் தினகரன். இவருக்கு தனி​யார் நிறுவன உரிமை​யாள​ரான கொளத்​தூர், பூம்​பு​கார் நகரைச் சேர்ந்த ஏகன் (39) என்​பவரது அறி​முகம் கிடைத்​து உள்​ளது.

ஏகன், பழைய ஸ்கேன் இயந்​திரத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை புதுப்​பித்து விற்​பனை செய்​தால் அதிக விலைக்கு வாங்​கு​வதற்கு ஆட்​கள் இருப்​ப​தாக​வும், தற்​போது ஒரு ஸ்கேன் இயந்​திரம் ரூ.15 லட்​சத்​துக்கு உள்​ள​தாக​வும், அதை வாங்கி புதுப்​பித்​தால் ரூ.30 லட்​சம் வரை விற்​பனை செய்​ய​லாம் என்​றும், அதில் வரும் லாபத்தை நாம் இரு​வரும் எடுத்​துக் கொள்​ளலாம் எனவும் தினகரனிடம் ஆசை வார்த்தை கூறி​யுள்​ளார்.

இதை நம்​பிய தினகரன், ராஜா​வின் வங்​கிக் கணக்​குக்கு ரூ.15 லட்​சத்தை அனுப்​பி​யுள்​ளார். பணம் பெற்​றுக் கொண்ட ராஜாவை அதன் பிறகு தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை. ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த தினகரன் இது தொடர்​பாக சேத்​துப்​பட்டு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் ரூ.15 லட்​சம் மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த ஏகன் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் அவர் நீதி​மன்ற காவலில்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x