Published : 27 Jul 2025 08:51 AM
Last Updated : 27 Jul 2025 08:51 AM

சிறுமி கொலை வழக்கில் தாய், ஆண் நண்பர் கைது

கோவை: கோவை​யில் 4 வயது சிறுமி கொலை வழக்​கில் சிறுமி​யின் தாய், அவரது ஆண் நண்​பர் கைது செய்​யப்​பட்​டனர்.

கோவை இரு​கூர் மாணிக்​கம் நகரைச் சேர்ந்​தவர் ரகுபதி (35). தனி​யார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தமிழரசி (25), மகள் அபர்​ணாஸ்ரீ(4). கணவன்​-மனை​விக்​கிடையே ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக ரகுப​தி​யும், மனைவி தமிழரசி​யும் தனித்​தனியே வசித்து வரு​கின்​றனர். குழந்தை அபர்​ணாஸ்ரீ தமிழரசி​யின் பராமரிப்​பில் இருந்​தார். தமிழரசி கட்​டிட வேலைக்​குச் சென்று வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் வீட்​டில் மயங்​கிக் கிடந்த குழந்தை அபர்​ணாஸ்ரீயை கோவை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு குழந்​தையைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிங்​காநல்​லூர் போலீ​ஸார், குழந்தை உயி​ரிழந்து தொடர்​பாக தாய் தமிழரசி​யிடம் விசா​ரித்​தனர். அப்​போது, அவர் முன்​னுக்கு பின் முரணாகப் பதில் அளித்​தார். இதையடுத்​து, அவரை காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரித்​த​போது, குழந்​தையை தாயே கழுத்தை நெரித்​துக் கொன்​றது தெரிய​வந்​தது.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “கடந்த 8 மாதங்​களாக கணவரைப் பிரிந்து வசித்த தமிழரசிக்​கு, கட்​டிடத் தொழிலாளி வசந்த்​(23) என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. இதற்கு குழந்தை அபர்​ணாஸ்ரீ இடையூறாக இருப்​பார் என்று கரு​தி​ய​தால், குழந்​தையைக் கொன்​றுள்​ளனர்” என்​றனர். இதையடுத்​து, தமிழரசி, வசந்த் ஆகியோரை நேற்று கைது செய்த போலீ​ஸார், நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி கோவை மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x