Published : 27 Jul 2025 04:49 AM
Last Updated : 27 Jul 2025 04:49 AM

நெய்வேலியில் இரிடியம் விற்க முயன்ற 7 பேர் கைது

கோப்புப் படம்

கடலூர்: நெய்​வேலி திரு​வள்​ளுவர் தெரு​வைச் சேர்ந்த முரு​கன் (48), தன்​னிடம் இரிடி​யம் இருப்​ப​தாக திருக்​கோ​விலூர் சேகர் (48), ஏழு​மலை (43), மருங்​கூர் மணி​கண்​டன் (41), நெய்​வேலி ஆனந்​தன் (38), கூத்​தப்​பாக்​கம் விக்​னேஷ்வரன் (33), பிர​வீன்​கு​மார் (41) ஆகியோரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இவர்​கள் இணைந்து இரிடி​யத்தை விற்க முயற்​சிப்​ப​தாக கடலூர் மாவட்ட போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் மாறு​வேடத்​தில் இரிடி​யம் வாங்​கு​வது​போல அந்த கும்​பலிடம் பேரம் பேசி வந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில் மாறு​வேடத்​தில் இருந்த போலீ​ஸாரை நேற்று நெய்​வேலி திடீர் குப்​பம் பகு​தி​யில் உள்ள ஒரு வீட்​டுக்கு அழைத்​துச் சென்ற அக்​கும்​பல், கண்​ணாடி பெட்​டி​யில் இருக்​கும் ஒரு பொருளை காட்​டி​யுள்​ளது. அப்​போது, காவல் ஆய்​வாளர் செந்​தில்​கு​மார் தலை​மையி​லான போலீ​ஸார், 7 பேரை​யும் கைது செய்​தனர். மேலும், அவர்​களிட​மிருந்து 2 கார்​கள், ஒரு பைக், இரிடி​யம் என்று கூறப்​படும் பொருள் ஆகிய​வற்​றை போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x