Published : 26 Jul 2025 05:20 AM
Last Updated : 26 Jul 2025 05:20 AM

பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி மனு

சென்னை: தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமதலா விஜய​காந்​தின் சுற்​றுப்​பயணத்​துக்கு அனு​மதி வழங்​கக்​கோரி தமிழக டிஜிபியிடம் அக்​கட்​சி​யின் பொருளாளர் எல்​.கே.சுதீஷ் மனு அளித்​துள்​ளார்.

அதன் விவரம்: தேமு​திக சார்​பில் மாநில அளவி​லான பிரச்​சா​ரம் வரும் ஆக.3 முதல் ஆக.23-ம் தேதி வரை நடத்​தப்​பட​வுள்​ளது. இதற்காக மறைந்த தேமு​திக தலை​வர் விஜய​காந்​தின் படம் பொருந்​திய திறந்​தநிலை கேர​வன் வாக​னத்தை பயன்படுத்தவுள்ளோம்.

இந்த பிரச்​சா​ர​மானது காவல்​துறை​யின் வழி​காட்​டு​தல்​களோடு மக்​களிடையே அமைதி, ஒற்​றுமையை ஏற்படுத்​தும் வகை​யில் நடத்​தப்​படும். இதற்​காக கட்சித் தரப்​பிலி ருந்து நிர்​வாகி​களின் ஒத்​துழைப்பு காவல்​ துறைக்கு முழு​மை​யாக வழங்​கப்​படும் என உறு​தி​யளிக்​கிறேன்.

எனவே தேமு​தி​க​வின் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி வழங்​கி, பிரச்​சா​ரத்​தின் போது பாது​காப்​புக்கு தேவை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x