Published : 26 Jul 2025 06:44 AM
Last Updated : 26 Jul 2025 06:44 AM

பண்ருட்டியில் அரசு மருத்துவர் வீட்டில் 158 பவுன் நகைகள் திருட்டு

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் பண்​ருட்டி அடுத்த புது பிள்​ளை​யார்​குப்​பத்​தில் வசிப்​பவர் ராஜா. விழுப்​புரம் அரசு மருத்துவமனை​யில் மருத்​து​வ​ராகப் பணிபுரிந்து வரு​கிறார். இவரது மனைவி ஆர்த்​தி, கடலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்துவராகப் பணிபுரிந்து வரு​கிறார்.

இவரது வீட்​டின் கீழ் தளத்​தில் ராஜா​வின் தந்தை வசித்து வரும் நிலை​யில், மேல் தளத்​தில் ராஜா, தனது குடும்​பத்​தினருடன் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் பணிக்​குச் சென்ற ராஜா நேற்று காலை வீடு திரும்​பி​னார்.

அப்​போது வீட்​டின் கதவு​கள் திறக்​கப்​பட்​டிருந்​தன. உள்ளே சென்று பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த 158 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்​றது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக காடாம்​புலியூர் காவல் நிலை​யத்​தில் ராஜா புகார் அளித்​தார். கடலூர் எஸ்.பி. ஜெயக்​கு​மார் உத்​தர​வின்​பேரில் தனிப்​படை போலீஸார், திருட்​டில் ஈடு​பட்​ட​வர்​களை தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x