Published : 25 Jul 2025 06:40 AM
Last Updated : 25 Jul 2025 06:40 AM

சென்னை | ஜிம் உபகரணம் விற்பவர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது

சென்னை: சென்னை திருவிக நகரில் வசித்து வருபவர் வினோத் (31). உடற்​ப​யிற்​சிக் கூடத்​தில் பயன்​படுத்​தும் உபகரணங்​களை வாங்​கி, விற்​கும் தொழில் செய்து வரு​கிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு, திருவிக நகர், ராம் நகர், 70 அடி சாலை​யில் அவரது காரில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வேக​மாக வந்த ஓர் இருசக்கர வாக​னம் வினோத் காரின் பின்​புறம் மோதி​யது.

அதிர்ச்சி அடைந்த வினோத் காரை நிறுத்​தி, இருசக்கர வாக​னத்​தில் வந்​தவர்​களிடம் இது தொடர்​பாக கேட்​டுள்​ளார். அப்​போது, இரு தரப்​பினருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது. இதையடுத்து இருசக்கர வாக​னத்​தில் வந்​தவர்​கள் அழைத்​த​தின்​பேரில், மேலும் ஒரு இருசக்கர வாக​னத்​தில் வந்த 2 இளைஞர்​கள் என மொத்​தம் 4 பேரும் சேர்ந்து வினோத்தை சரமாரி​யாகத் தாக்​கினர். பின்​னர், அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர்.

தாக்​குதலில் காயம் அடைந்த வினோத் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். பின்​னர் இது தொடர்​பாக திருவிக நகர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் தாக்​குதல் நடத்​தி​விட்டு தப்​பியது கொசப்​பேட்டை சதிஷ்கு​மார் (18), சாம்​கு​மார் (22), ஓட்​டேரி விக்​னேஷ் என்ற விக்கி (19), பெரம்​பூர் முகம்​மதுதோஷிப் (18) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவர்​கள் அனை​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்​. தொடர்ந்​து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x