Published : 23 Jul 2025 05:46 AM
Last Updated : 23 Jul 2025 05:46 AM

டிராக்டர் தயாரிப்பு வரைபடத்தை சட்ட விரோதமாக விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன் - மனைவி கைது

சென்னை: டி​ராக்​டர் தயாரிக்​கும் வரைபடத்தை சட்ட விரோத​மாக விற்​பனை செய்த வழக்​கில் தலைமறை​வாக இருந்த கணவன், மனைவி கைதாகினர். சென்னை கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள வாக​ன தயாரிப்பு நிறுவனத்​துக்​குச் சொந்​த​மான டிராக்​டர் தயாரிக்கும் வரைபடங்​கள் மற்​றும் இதர ஆவணங்​களைத் திருடி சிலர் போட்டி நிறு​வனத்​துக்கு விற்​பனை செய்​து​விட்​ட​தாக சம்பந்தப்​பட்ட நிறு​வனம் சார்​பில் 2005-ல் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், அந்த நிறு​வனத்​தில் பணி செய்த கணவன், மனை​வி​யான தஞ்​சாவூர் மாவட்​டம், வீரியன் கோட்​டையைச் சேர்ந்த ராஜா (55), அவரது மனைவி விஜயலட்​சுமி (52) ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இது தொடர்​பான வழக்கு சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. பின்​னர் அவர்கள் தலைமறை​வாகினர்.

இதையடுத்​து, கடந்​தாண்டு சென்னை சைதாப்​பேட்டை 11-வது நீதி​மன்​றம் இரு​வருக்​கும் பிடி​யாணை பிறப்​பித்​தது. இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் ராதிகா தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் இரு​வரை​யும் தீவிரமாகத் தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் தஞ்சை மாவட்​டம், வீரியன்​கோட்​டை, பேராவூரணியில் பதுங்​கி​யிருந்த ராஜா, விஜயலட்சுமி ஆகிய இரு​வரை​யும் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி மீண்​டும் சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x