Published : 23 Jul 2025 06:35 AM
Last Updated : 23 Jul 2025 06:35 AM

மகளை கொலை செய்து தந்தை தற்கொலை முயற்சி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சதீஷ்

சென்னை: அயனாவரம் ஏகாங்​கிபுரம், 4-வது தெரு​வைச் சேர்ந்​தவர் சதீஷ் (38). இவரது மனைவி ரெபேக்கா (30). காதல் திரு​மணம் செய்து கொண்ட இவர்​களின் மகள் ஸ்டெபி ரோஸ் (7). சதீஷுக்​கும், ரெபேக்கா​வும் இடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டு, கடந்த ஓராண்​டாக பிரிந்து வாழ்​கின்​றனர். குழந்தை ஸ்டெபி ரோஸ் சதீஷிடம் இருந்த நிலை​யில், தன்​னிடம் ஒப்​படைக்​கு​மாறு ரெபேக்கா நெருக்​கடி கொடுத்து வந்​தார்.

ஆனால் சதீஷ் குழந்​தையை ஒப்​படைக்க மறுத்​துள்​ளார். ரெபேக்கா அண்​மை​யில் ஓட்​டேரி காவல் நிலை​யத்​தில், குழந்​தையை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்க வேண்​டும் என புகார் அளித்​தார். இதன் காரண​மாக மகளை தன்​னிட​மிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அச்​சத்​தில் சில நாட்​களாக சதீஷ் மிக​வும் சோக​மாக காணப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சதீஷ், மகளுடன் ஆலந்​தூர் எம்​.கே.என். சாலை​யில் உள்ள ஓர் ஓட்​டலில் நேற்று முன்​தினம் இரவு அறை எடுத்து தங்கி​னார். நேற்று அதி​காலை தனது சகோ​தரி கெசி​யாவை செல்​போனில் தொடர்பு கொண்ட சதீஷ், மகளை கொலை செய்துவிட்​டு, தானும் தற்​கொலை செய்து கொள்​ளப்​போவ​தாக தெரி​வித்​து​விட்டு இணைப்பை துண்​டித்​துள்​ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த கெசி​யா, உடனே சம்​பந்​தப்​பட்ட ஓட்​டலுக்கு விரைந்​துள்​ளார். அங்கு அவர் ஓட்​டல் ஊழியர்​கள் உதவி​யுடன், சதீஷ் தங்​கி​யிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​தார்.

அங்கு குழந்தை ஸ்டெபி ரோஸ் கத்​தி​யால் குத்​திக் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தது. சதீஷ் தன்​னைத் தானே கழுத்தை அறுத்​துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்​டிருப்​ப​தைக் கண்​டார். உடனடி​யாக அவர் மீட்​கப்​பட்டு ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

தகவலறிந்த பரங்​கிமலை போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​று, சிறுமி ஸ்டெபி ரோஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக குரோம்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதுகுறித்து போலீ​ஸார்​ தொடர்ந்​து விசாரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x