Published : 22 Jul 2025 06:48 AM
Last Updated : 22 Jul 2025 06:48 AM

சென்னை | பக்​கத்து வீட்​டுக்​காரரை பயமுறுத்த வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்​பு​களை வைத்தவர் கைது

சென்னை: வடபழனி​யில் பக்​கத்து வீட்​டுக்​காரரை பயமுறுத்​து​வதற்​காக அவரது வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்​பு​களை வைத்த இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை வடபழனி சோமசுந்தர பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்​தவர் கருணாகரன் (51).

நேற்று முன்​தினம் காலை இவர் தனது வீட்​டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்​த​போது, வாசலில் மனித மண்டை ஓடு மற்​றும் எக்ஸ் வடிவத்​தில் எலும்பு துண்​டு​கள் வைக்​கப்​பட்​டிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார்.

இதையடுத்​து, வீட்​டில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேமரா பதிவு​களை பார்த்​த​போது, பக்​கத்து வீட்​டுக்​கார​ரான அப்​சர் அலி (24) என்​பவர் மனித எலும்​பு​களை வைத்து சென்​றது தெரிய​வந்​தது.

இதுபற்றி கருணாகரன் கேட்​ட​போது, அப்​சர் அலி தகாத வார்த்​தைகளால் பேசி​யுள்​ளார். வீட்​டிலிருந்த கத்​தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வடபழனி காவல் நிலை​யத்​தில் கருணாகரன் புகார் கொடுத்​தார். புகாரின் பேரில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார் அப்​சர் அலியை கைது செய்​து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x