Published : 21 Jul 2025 06:41 AM
Last Updated : 21 Jul 2025 06:41 AM

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் மீது தாக்குதல்: திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

ஏ.வி.ஆறுமுகம்

பொன்னேரி: அடுக்​கு​மாடி குடி​யிருப்பு போடப்​பட்ட ஒப்​பந்​தப்​படி முழு தொகையை திருப்பி தராமல் உரிமை​யாளர் மீது தாக்​குதல் நடத்​தி​யது தொடர்​பாக, திமுகவை சேர்ந்த, சென்னை மாநக​ராட்சி மணலி மண்டல குழு தலை​வர் உள்​ளிட்ட 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

சென்​னை, கொடுங்​கையூர், முத்​தமிழ்​நகரை சேர்ந்​தவர் ரமேஷ்(44). இவர் தனக்கு சொந்​த​மான அடுக்​கு​மாடி குடி​யிருப்​புக்​காக வாங்​கப்​பட்ட கடன்​களை முழு​மை​யாக செலுத்த முடி​யாமல் அவதி​யுற்று வந்​த​தாக தெரி​கிறது. இதனால், சம்​பந்​தப்​பட்ட அடுக்​கு​மாடி குடி​யிருப்பை விற்க முடிவு செய்​தார்.

அதன்​படி, கடந்த ஆண்டு திமுகவைச் சேர்ந்த சென்னை மாநக​ராட்சி மணலி மண்டல குழு தலை​வ​ரான ஏ.வி.ஆறு​முகத்​தின் அண்​ணன் முரு​க​னிடம் அடுக்​கு​மாடி குடி​யிருப்பை விற்​பனை செய்ய முடிவு செய்​தார் ரமேஷ். இதையடுத்​து, ’ரமேஷ் பெற்ற கடன்​களில், வங்​கி​யிடம் பெற்ற கடனை ஒரு மாதத்​தி​லும், மற்ற கடன்​களை 6 மாதங்​களி​லும் அடைத்து விடு​வ​தாக’ கூறி​யுள்​ளார் முரு​கன்.

ஆகவே, முரு​க​னிடம் ரமேஷ் கிரைய ஒப்​பந்​தம் போட்​டுள்​ளார். அந்த ஒப்​பந்​தப்​படி, ’முழுத் தொகையை அளிக்க முடி​யாது, வங்​கிக் கடனை மட்​டுமே அடைக்க முடி​யும் என, முரு​கன் தரப்​பினர், ரமேஷிடம் தெரி​வித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இச்​சூழலில், இந்த விவ​காரம் தொடர்​பாக பேச வேண்​டும் என, ரமேஷை கடந்த ஆண்டு டிச.10-ம் தேதி அன்று சென்னை மாநகராட்சி மணலி மண்டல குழு அலு​வல​கத்​துக்கு அழைத்​துள்​ளார் மண்டல குழு தலை​வர் ஏ.வி.ஆறு​முகம். இதையடுத்​து, அங்கு சென்ற ரமேஷ் மீது ஏ.வி.ஆறு​முகம் மற்​றும் முனு​சாமி, திரு​நாவுக்​கரசு உள்​ளிட்ட 10-க்​கும் மேற்​பட்​டோர் தாக்​குதல் நடத்​தியதோடு, கொலை மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்​து, மணலி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார். அப்​பு​காரின் மீது போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்​காத​தால், திரு​வொற்​றியூர் உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் ரமேஷின் மனைவி வழக்கு தொடர்ந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த திரு​வொற்​றியூர் உரிமை​யியல் நீதி​மன்​றம், ரமேஷின் புகார் மீது வழக்​குப் பதிவு செய்ய வேண்​டும் என, சமீபத்​தில் உத்​தர​விட்​டது.

அந்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஏ.வி.ஆறு​முகம் உள்​ளிட்ட 4 பேர் மீது, தாக்​குதல் நடத்​தி​யது, கொலை மிரட்​டல் விடுத்​தது, ஆபாச​மான வார்த்​தைகளால் திட்​டியது தொடர்​பாக 3 சட்​டப் பிரிவு​களின் கீழ், மணலி போலீ​ஸார் கடந்த 17-ம்​ தேதி வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x