Published : 21 Jul 2025 05:38 AM
Last Updated : 21 Jul 2025 05:38 AM

சென்னையில் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த சைக்கிள்களை குறிவைத்து திருடியவர் கைது

சென்னையில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்களை திருடி வந்த தாமோதரன் கைது செய்யப்பட்டார்.

சென்னை: சென்னையில் பல்வேறு பகு​தி​களில் சைக்​கிள்​களை குறி​வைத்து திருடி வந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். அவரிடமிருந்து 40 சைக்​கிள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சென்னை கொடுங்​கையூர், ஜெய் பாலாஜி நகர் பகு​தி​யில் வசித்து வருபவர் எட்​வர்ட் (48). இவர் அவரது மகனின் சைக்​கிளை வழக்​கம் ​போல் கடந்த 18-ம் தேதி இரவு வீட்டு வளாகத்​தில் நிறுத்தியிருந்தார்.

அந்த சைக்​கிள் காணா​மல் போனது. இது தொடர்​பாக கொடுங்​கையூர் காவல் நிலை​யத்​தில் அவர் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதே​போல், சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களி​லும் சைக்​கிள்​கள் அடுத்​தடுத்து திருடு​போ​யின.

இந்​நிலை​யில் கொடுங்​கையூர் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் எட்​வர்ட் மகனின் சைக்​கிளை திருடியது கொடுங்​கையூர், பார்வதி நகர் 1-வது தெரு​வைச் சேர்ந்த தாமோதரன் (54) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். அவரிட​மிருந்து கொடுங்​கையூர் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யில் திருடு​போன 6 சைக்​கிள்​கள் உட்பட சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் திருடப்​பட்ட 40 சைக்​கிள்​கள் மீட்​கப்​பட்​டன.

மேலும் விசா​ரணை​யில், கைதான தாமோதரன் கொடுங்​கையூர் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகு​தி​களில் நிறுத்தி வைக்​கப்​பட்டிருந்த விலை உயர்ந்த சைக்​கிள்​களை நோட்​ட​மிட்டு திருடி​யுள்​ளார். மேலும், அந்த சைக்​கிள்​களை விற்று மது குடிப்​ப​தோடு, தாராள​மாக செலவு செய்​துள்​ளார். பணம் தீர்ந்​தவுடன் மீண்​டும் சைக்​கிள்​களை திருடும் வேலை​யில் ஈடு​பட்டு வந்​துள்​ள​தாக போலீஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x