Published : 21 Jul 2025 06:43 AM
Last Updated : 21 Jul 2025 06:43 AM

திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: ​திருக்​கோ​விலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்​ளத்​தில் கவிழ்ந்​த​தில் 5 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்​தனர். விழுப்​புரம் மாவட்​டம் அரகண்​டநல்​லூர் அடுத்த தேவனூர் கூட்​ரோடு பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதவன் (44) ஆயுதப்​படைக் காவலர்.

இவர் மனைவி மேனகா (22), அதே பகு​தி​யைச் சேர்ந்த தனலட்​சுமி (70), ராகவேந்​திரன் (13), சங்​கீதா (36), ஒரு வயது குழந்தை கவுசி​கா, சுபா (55), சாந்தி (65), பூமாரி கிராமத்​தைச் சேர்ந்த சரிதா (22), அவரது சகோ​தரர் மோகன் (13) ஆகியோர் நேற்று காரில் திரு​வண்​ணா​மலை கோயிலுக்கு சென்று கொண்​டிருந்​தனர்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் திருக்​கோ​விலூர் அடுத்த அத்​திப்​பாக்​கம் அருகே சென்​ற​போது, திடீரென காரின் முன்​பக்க டயர் வெடித்​தது. இதில் ஓட்​டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யோர பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் தனலட்​சுமி, அவரது பேரன் ராகவேந்​திரன், சங்​கீ​தா, சுபா ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

காயமடைந்த மற்​றவர்​களை அரு​கில் இருந்​தவர்​கள் மீட்​டு, திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு சாந்தி (65) சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். மற்​றவர்​களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. விபத்து தொடர்​பாக மணலூர்​பேட்டை போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x