Published : 20 Jul 2025 07:53 AM
Last Updated : 20 Jul 2025 07:53 AM

அஜித்குமாரை போலீஸார் தாக்கிய இடங்களுக்கு சாட்சிகளை அழைத்து சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம் கோயில் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்.

சிவகங்கை: திருப்​புவனம் அருகே மடப்​புரம் கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை போலீ​ஸார் தாக்​கிய இடங்​களுக்கு சாட்​சிகளை அழைத்​துச் சென்று சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோஹித்​கு​மார் தலை​மையி​லான அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். நேற்று முன்​தினம் மதுரை ஆத்​தி​குளத்​தி​லுள்ள சிபிஐ அலு​வல​கத்​தில் அஜித்​கு​மார் தம்பி நவீன்​கு​மார், ஆட்டோ ஓட்​டுநர் அருண்​கு​மார், கோயில் காவலா​ளி​கள் வினோத்​கு​மார், பிர​வீன்​கு​மார், கோயில் உதவி ஆணை​யரின் ஓட்​டுநர் கார்த்​திக்​வேல், தனிப்​படை வாகன ஓட்​டுநரும், காவலரு​மான ராமச்​சந்​திரன் ஆகியோரிடம் பல மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

இந்​நிலை​யில், நேற்று திருப்​புவனம் காவல் நிலை​யத்​துக்கு வந்த சிபிஐ அதி​காரி​கள், தனிப்​படை வாகன ஓட்​டுநர் ராமச்​சந்​திரனிடம் விசா​ரித்​தனர். தொடர்ந்​து, ராமச்​சந்​திரன், நவீன்​கு​மார், அருண்​கு​மார், வினோத்​கு​மார், பிர​வீன்​கு​மார் ஆகியோரை காரில் அழைத்​துச் சென்​றனர். பின்​னர், அங்​காடிமங்​கலம் செல்​லும் வழி​யில் உள்ள மீன், காய்​கறி கடை வியா​பாரி​களிடம் விசா​ரித்​தனர். மடப்​புரம் விலக்​கில் கோயில் தோரண​வா​யிலுக்கு ஆட்டோ ஓட்​டுநர் அருண்​கு​மாரை அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

தொடர்ந்​து, தட்​டான்​குளம் காலி​யிடம், தவளைக்​குளம் கண்​மாய் செல்​லும் வழி​யில் உள்ள புளியமரத்​தடி​யிலும் சாட்​சிகளிடம் விசா​ரித்​தனர். நான்கு வழிச் சாலை​யில் இருந்து நரிக்​குடி சாலை சந்​திப்​பில் உள்ள பேக்​கரிக்கு அடிக்​கடி தனிப்​பிரிவு காவலர்​கள் வந்து சென்​ற​தாக கூறப்​பட்ட நிலை​யில், அங்​கும் விசா​ரித்​தனர்.

நம்பர் பிளேட் பறிமுதல்: அஜித்​கு​மாரை போலீ​ஸார் தாக்​கிய இடமான மடப்​புரம் கோயில் பின்​புறம் உள்ள மாட்​டுத் தொழு​வத்​தில் தனிப்​படை வாகன ஓட்​டுநர் ராமச்​சந்​திரனிடம் பல மணி நேரம் விசா​ரித்​தனர். மேலும், அங்கு அஜித்​கு​மாரின் காலணி, சுவரில் காய்ந்​திருந்த அஜித்​கு​மாரின் ரத்​தத் துளி​கள், கீழே காய்ந்​திருந்த சிறுநீர், மலம் ஆகிய​வற்றை சேகரித்​தனர்.

அத்​துடன், போலீ​ஸார் பயன்​படுத்​தி​ய​தாக கூறப்​படும் கம்​பு, பிளாஸ்​டிக் பைப்​களை​யும் ஆய்வு செய்​தனர். அதே​போல, போலீ​ஸார் பயன்​படுத்​திய அரசு வாக​னத்​தில் இருந்த, சென்னை பதிவெண் இடம்​பெற்​றிருந்த நம்​பர் பிளேட்​டை​யும் சிபிஐ அதி​காரி​கள் கைப்​பற்​றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x