Published : 19 Jul 2025 07:24 AM
Last Updated : 19 Jul 2025 07:24 AM

சென்னை | ரோந்து பணியிலிருந்த போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் கைது

அபிலாஷ், அஜய்​கு​மார்

சென்னை: ரோந்து பணியி​ல் இருந்த காவலர் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக இளைஞர்​கள் இரு​வர் கைது செய்​யப்​பட்டனர். அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் காவல​ராக பணிபுரிந்து வருபவர் மாரியப்​பன். இவர் கடந்த 16-ம் தேதி இரவு, அண்ணா நகர் கிழக்​கு, 1-வது அவென்யூ பகு​தி​யில் உள்ள மது​பானக் கடை அரு​கில் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார். அப்​போது, அங்கு நின்​றிருந்த இளைஞர்கள் இரு​வர் அந்த வழி​யாக சென்ற பொது​மக்​களிடம் வீண் தகராறு செய்து கொண்​டிருந்​தனர்.

இதை கவனித்த காவலர் மாரியப்​பன், அந்த இளைஞர்​களை அங்​கிருந்து செல்​லும்​படி அறி​வுறுத்​தி​னார். இதற்கு மறுப்பு தெரி​வித்து வாக்​கு​வாதம் செய்த அந்த இளைஞர்​கள் தரக்​குறை​வாக பேசி​யதோடு, காவலர் மாரியப்​பனை சரமாரி​யாக தாக்​கி​விட்​டு, இருசக்கர வாக​னத்​தில் தப்​பிச் சென்​றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன், இந்த விவ​காரம் தொடர்​பாக அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.

காவலரை தாக்​கி​விட்டு தலைமறை​வாக இருந்த ஐசிஎப், கக்​கன்ஜி நகர் அபிலாஷ் (19), நம்​மாழ்​வார்ப்​பேட்டை அஜய்​கு​மார் (21) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றக் காவலில் சிறை​யில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x