Published : 19 Jul 2025 05:54 AM
Last Updated : 19 Jul 2025 05:54 AM

மதுரை | கஞ்சா, மெத்தம்பெட்டமைன் கடத்திய 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட அண்ணாமலை, சூரியபிரகாஷ், லட்சுணன், ராமர்.

மதுரை: சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடியைச் சேர்ந்த அண்​ணா​மலை, மதுரை மேல அண்ணா தோப்பு பகு​தி​யைச் சேர்ந்த ராமர், லட்​சுமணன், ஆனையூர் சூர்​யபிர​காஷ் ஆகியோர் இன்​ஸ்​டாகி​ராம் மூலம் நண்​பர்​களாகி​யுள்​ளனர். சில மாதங்​களுக்கு முன்பு இவர்​கள் குற்ற வழக்​கில் சிக்கி கோவை சிறை​யில் இருந்​தனர்.

அப்​போது, அங்​கிருந்த மதுரை நவீன் நாக​ராஜ் என்​பவருடன் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அவர் மூலம் பெங்​களூரு​வில் உள்ள தினேஷ், மதுரை மேல​வாசல் ஹரி, கரிமேடு காக்​கா​முட்டை கார்த்​திக் ஆகியோ​ருட​னும் இவர்​களுக்கு அறி​முகம் கிடைத்​துள்​ளது.

தற்​போது நவீன் நாக​ராஜ் பெங்​களூரு சிறை​யில் இருக்​கிறார். அவருடன் இன்​ஸ்​டாகி​ராம் மூலம் அண்​ணா​மலை உட்பட 4 பேர் தொடர்​பு​கொண்​டுள்​ளனர். அவரது உதவி​யின்​பேரில், பெங்​களூரு தினேஷ் மூல​மாக கஞ்​சா, மெத்​தம்​பெட்​டமைன் வாங்கி வந்து, மதுரை​யில் விற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், பெங்​களூரு​வில் இருந்து கஞ்​சா, மெத்​தம்​பெட்​டமைனை வாங்​கிக் கொண்​டு, மதுரை​யில் விற்​ப​தற்​காக பேருந்​தில் 4 பேர் வரு​வ​தாக போலீஸுக்​குத் தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, காவல் ஆய்​வாளர் சேது​மணி மாதவன் தலை​மையிலான போலீஸார், பாத்​திமா கல்​லூரி அருகே பேருந்தை நிறுத்தி சோதனை​யிட்​டனர்.

அப்​போது, பேருந்​தில் பயணித்த அண்​ணா​மலை(25), லட்​சுமணன் (21), ராமர் (21), சூர்​யபிர​காஷ் (24) ஆகியோர் 25 கிலோ கஞ்​சா, 10 கிராம் மெத்​தம் ​பெட்​டமைன் வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. அவற்​றைப் பறிமுதல் செய்த போலீ​ஸார், 4 பேரை​யும் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x