Published : 18 Jul 2025 06:01 AM
Last Updated : 18 Jul 2025 06:01 AM

திருவாரூர் அருகே அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த 3 பேர் கைது

திருவாரூர்: திரு​வாரூர் அரு​கே​யுள்ள காரி​யாங்​குடி அரசு தொடக்​கப் பள்​ளி​யில் கடந்த 11-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்​கள், அங்கிருந்த குடிநீர் பைப்​பு​களை உடைத்​தெறிந்​ததுடன், சமையலறை​யில் இருந்த பாத்​திரங்​கள், பொருட்​களை சேதப்​படுத்​தினர். பின்​னர், அங்​குள்ள குடிநீர் தொட்​டி​யில் மனிதக் கழிவை கலந்​து​விட்டு சென்​று​விட்​டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திரு​வாரூர் தாலுகா போலீ​ஸார் தனிப்​படை அமைத்​து, குற்​ற​வாளி​களைத் தேடி வந்​தனர். தொடர் விசாரணை​யில், அதே பகு​தி​யைச் சேர்ந்த வெல்​டிங் கடை உரிமையாளர் விஜய​ராஜ்(36), உதவி​யாளர் செந்​தில்​(38), பெயின்​டர் காளிதாஸ்​(25) ஆகியோர் இந்த ​செயலில் ஈடு​பட்​டது தெரிந்தது.

இதையடுத்​து, பள்​ளிக்​குள் அத்​து​மீறி நுழைந்​தது, அரசுக்கு சொந்​த​மான பொருட்​களை சேதப்​படுத்​தி​யது உள்​ளிட்ட 5 பிரிவு​களில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, 3 பேரை​யும் நேற்று கைது செய்​தனர். பின்​னர், மூவரை​யும் திரு​வாரூர் குற்ற​வியல் நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்​தி, சிறை​யில் அடைத்தனர்​.

இந்த வழக்​கில் சிறப்​பாக செயல்​பட்ட காவல் ஆய்​வாளர் ஜெயந்​தி, உதவி ஆய்வாளர் மகேந்​திரன் மற்​றும் போலீஸாருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x