Published : 17 Jul 2025 06:52 AM
Last Updated : 17 Jul 2025 06:52 AM

சென்னை | காங்கிரஸ் பிரமுகர் குடோனில் திருட்டு: மெத்தனம் காட்டுவதாக போலீஸார் மீது குற்றச்சாட்டு

சென்னை: நுங்​கம்​பாக்​கத்​தில் காங்​கிரஸ் பிர​முகர் கடை​யில் நடை​பெற்ற திருட்டு சம்​பவத்​தில், தொடர்​புடைய​வர்​களை கைது செய்​யாமல் போலீ​ஸார் மெத்​தனம் காட்​டு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. சென்​னை, நுங்​கம்​பாக்​கம் வள்​ளுவர் கோட்​டத்​தில், காங்​கிரஸ் பிர​முகர் கவுரி சங்​கர்மண்​பாண்​டம், சிற்​பங்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

அதே பகு​தி​யில் உள்ள இவரது குடோனில் கடந்த மாதம் 22-ம் தேதி மணற் சிற்​பங்​கள், கடப்பா கற்​கள், இரும்பு பொருட்​கள், டைல்ஸ் பாக்​ஸ், கான்​கிரீட் சிமெண்ட் தொட்​டி, கிரானைட் மார்​பில்ஸ் போன்​றவை திருடு போனது.

இதுதொடர்​பாக, கவுரி சங்​கர் நுங்​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். இதுகுறித்​து, போலீ​ஸார் விசா​ரணை மேற்கொண்​டனர். இதில், கொள்​ளை​யர்​கள் 4 பேர், பைக்​கில் வந்து கவுரி சங்​கர் குடோனில் உள்ள பொருட்​களை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடி சென்​றது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, திருடிய நபர்​களை போலீ​ஸார் அடை​யாளம் கண்​டனர். ஆனால், அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​காமல் நுங்கம்பாக்கம் போலீ​ஸார் காலம் தாழ்த்தி வரு​வ​தாக​வும், குற்​ற​வாளி​களுக்கு ஆதர​வாக செயல்​படு​வ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x