Published : 17 Jul 2025 06:34 AM
Last Updated : 17 Jul 2025 06:34 AM

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைன் கடத்திய இளம்பெண் கூட்டாளியுடன் கைது

வினோ​தினி, அவி​னாஷ்

சென்னை: பெங்​களூரு​விலிருந்து சென்​னைக்கு மெத்​தம்​பெட்​டமைனை கடத்தி வந்த இளம் பெண் கூட்​டாளி​யுடன் கைது செய்யப்பட்​டார். இக்​கும்​பல் சினிமா துறை​யினரை குறி​வைத்து போதைப் பொருளை விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​துள்​ளது. சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​களு​டன் போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினரும் ஒருங்​கிணைந்து கண்​காணித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், எம்​ஜிஆர் நகர் காவல் நிலைய போலீ​ஸாருக்கு கடந்த 12-ம் தேதி ரகசி​யத் தகவல் ஒன்று கிடைத்​தது. இதையடுத்து அன்று மதி​யம் எம்​ஜிஆர் நகர், கே.கே.​சாலை​யிலுள்ள ஓட்​டல் அருகே போலீ​ஸார் கண்​காணித்​தனர்.

அங்கு மெத்​தம் பெட்​டமைன் போதைப் பொருள் வைத்​திருந்த சங்​கர ​நா​ராயணன், பிர​சாந்த், ஆகாஷ்கு​மார் மற்​றும் மணி​கண்டசாமி ஆகிய 4 பேரை கைது செய்து நீதி​மன்​ற. காவலுக்கு உட்​படுத்​தினர். முன்​ன​தாக அவர்​களிட​மிருந்து மெத்தம்பெட்டமைன் மற்​றும் கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இவர்​கள் கொடுத்த தகவலின்​பேரில் தலைமறை​வாக இருந்த திரு​வேற்​காடு அவி​னாஷ் (25), குரோம்​பேட்டை வினோ​தினி என்ற ஜாய்ஸ் (24) ஆகிய மேலும் இரு​வர் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டனர். விசா​ரணை​யில் வினோ​தினி பெங்​களூரு​விலிருந்து சென்​னைக்கு அடிக்​கடி மெத்​தம்​பெட்​டமைனை பயணி போல் பேருந்​தில் கடத்தி வந்​து, அதை தனது கூட்​டாளி​களிடம் ஒப்​படைத்து சினிமா துறை​யினர், ஐ.டி ஊழியர்​கள், இளைஞர்​களை குறி​வைத்து அதிக விலைக்கு விற்​பனை செய்​து​வந்​தது தெரிய​வந்​தது.

மேலும் இவரே போதைப் பொருள் கடத்​தலுக்கு மூளை​யாக​வும் செயல்​பட்​டுள்​ளார். இந்த கும்​பலின் பின்​னணி குறித்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கிறோம் என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை போலீ​ஸார் தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x