Published : 15 Jul 2025 06:56 AM
Last Updated : 15 Jul 2025 06:56 AM

சென்னை | பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தகராறு: இளைஞரை கொலை செய்த நண்பர்கள் 4 பேர் கைது

சென்னை: பிறந்​த​நாள் கொண்​டாட்​டத்​தின் போது, இளைஞர் வெட்டி கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், அவரது நண்​பர்​கள் 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். வியாசர்​பாடி, எம்​கேபி நகர் அருகே உள்ள புதுநகர் 7-வது தெரு​வைச் சேர்ந்​தவர் குமார். இவரது மனைவி சித்​ரா. இத் தம்​ப​திக்கு சங்​கர் (19) என்ற மகனும், வனிதா (17) என்ற மகளும் இருந்​தனர்.

சங்​கர் கல்​லூரி படிப்பை பாதி​யில் நிறுத்​தி​விட்​டு, பைக் மெக்​கானிக்​காக வேலை செய்து வந்​தார். இந்​நிலை​யில், சங்​கர், நேற்​று​முன்​தினம் தனது பிறந்​த​நாளை எருக்​கஞ்​சேரி சாலை​யில் தனது நண்​பர்​களு​டன் கேக் வெட்டி கொண்​டாடி​னார். பின்​னர், அனை​வரும் மது அருந்​தினர். அப்​போது, அன்று காலை கால்​பந்து விளை​யாடும் போது அதே பகு​தி​யைச் சேர்ந்த ஒரு​வரை சங்​கர் தாக்​கியது குறித்து அவரது நண்​பர்​கள் கேட்​டனர். இதில் சங்​கருக்​கும், அவரது நண்​பர்​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

வாக்​கு​வாதம் முற்​றவே சங்​கரை அவரது நண்​பர்​கள் தாங்​கள் மறைத்து வைத்​திருந்த அரி​வாளால் வெட்டி விட்டு தப்​பினர். இதில், அவர் சம்பவ இடத்​திலேயே இறந்​தார். தகவலறிந்து கொடுங்​கையூர் போலீ​ஸார் நிகழ்​விடம் விரைந்​து, சங்​கர் சடலத்தை கைப்​பற்றி பிரேத பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இதுதொடர்​பாக, கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சங்​கரின் நண்​பர்​களான அதேப் பகு​தி​யைச் சேர்ந்த லிங்​கேஷ், நித்​தின், ஸ்டீபன் ராஜ், விஜய் ஆகிய 4 பேரை கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். மற்​றொரு கொலை கொடுங்​கையூர் ஆர்​.ஆர். நகரைச் சேர்ந்​தவர் ஹரி​கிருஷ்ணன் (30). குப்பை பொறுக்​கும் வேலை செய்து வந்த இவர், நேற்று முன்​தினம் அதி​காலை அவரது வீட்​டருகே உள்ள டாஸ்​மாக் கடை அருகே கொலை செய்​ யப்​பட்டு கிடந்​தார்.

இதுகுறித்​து, கொடுங்​கையூர் போலீ​ஸார் விசா​ரித்​து, கொடுங்​கையூர் ஆர்​.ஆர். நகரைச் சேர்ந்த பிரேம் குமார் என்ற கொக்கு (25) என்​பவரை கைது செய்​தனர். சில தினங்​களுக்கு முன்​னர் மது போதை​யில் கொலை செய்​யப்​பட்ட ஹரி​கிருஷ்ணன், பிரேம்​கு​மாரின் செல்​போன் மற்​றும் ஆதார் கார்டை பெற்​றுக் கொண்டு திருப்பி கொடுக்​க​வில்​லை. இதனால், ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் பிரேம்​கு​மார் கொலை செய்​தது தெரிய வந்​த​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x