Published : 14 Jul 2025 06:57 AM
Last Updated : 14 Jul 2025 06:57 AM

பாணாவரம் அருகே குட்டையில் மூழ்கி சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் பரிதாப உயிரிழப்பு

புவனேஷ்வரன், மோனி பிர​சாத், சுஜன்

ராணிப்​பேட்டை: பாணாவரத்தில் வீட்​டின் அருகே விளை​யாடச் சென்ற அண்​ணன் - தம்பி உட்பட 3 சிறு​வர்​கள் குட்​டை​யில் மூழ்கி உயி​ரிழந்​தனர். ராணிப்​பேட்டை மாவட்​டம் சோளிங்​கர் அடுத்த பாணாவரம் மேட்​டு​குன்​னத்​தூர் நடுத்​தெரு​வைச் சேர்ந்​தவர் சரவணன் மகன் புவனேஷ்வரன் (7). இவர் அதே பகு​தி​யில் உள்ள ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப் பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்து வந்​தார். அதே பகு​தி​யைச் சேர்ந்த கோபி​யின் மகன்​கள் மோனி பிர​சாத் (9), சுஜன் (7). மோனி பிர​சாத் 5-வகுப்​பும், சுஜன் 3-ம் வகுப்​பும் படித்து வந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்று சிறு​வர்​கள் 3 பேரும் வீட்​டின் அருகே விவ​சாய நிலத்​தில் உள்ள குட்​டை​யில் இறங்கி விளை​யாடிக்​கொண்​டிருந்​தனர். எதிர்​பா​ராத​வித​மாகச் சிறு​வர்​கள் 3 பேரும் அடுத்​தது நீரில் மூழ்​கித் தத்​தளித்​தனர். இவர்​களது அலறல் சப்​தம் கேட்டு அரு​கில் இருந்​தவர்​கள் ஓடிச்​சென்று நீரில் மூழ்​கிய 3 பேரை​யும் மீட்டு பாணாவரம் அரசு மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர்.

அங்கு சிறு​வர்​கள் 3 பேரை​யும் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், வழி​யிலேயே மூவரும் உயி​ரிழந்து விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். தகவலறிந்து சென்ற பாணாவரம் போலீ​ஸார் 3 பேரின் உடல்​களை​யும் மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக சோளிங்​கர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், விபத்து தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x