Published : 14 Jul 2025 06:40 AM
Last Updated : 14 Jul 2025 06:40 AM

நாகப்பட்டினம் | படப்பிடிப்பின்போது பயிற்சியாளர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்​டம் கீழையூர் அருகே விழுந்​த​மாவடி கிராமத்​தில் இயக்​குநர் பா.ரஞ்​சித் இயக்​கத்​தில் வேட்​டு​வன் என்ற திரைப்​படத்​தின் படப்​பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், விழுந்​த​ மாவடி​யில் நேற்று காலை வழக்​கம்​போல படப்​பிடிப்பு நடை​பெற்​றது. அப்​போது, சண்​டைக் காட்​சிகள் படமாக்​கப்​பட்​டன.

காஞ்​சிபுரம் மாவட்​டம் பூங்​கண்​டத்​தைச் சேர்ந்த சண்​டைப் பயிற்​சி​யாளர் மோகன்​ராஜு(52) காரிலிருந்து தாவும் காட்​சி​யில் நடித்துள்​ளார். அப்​போது, அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தால், அவரை நாகை அரசு மருத்து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர்.

அவரைப் பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், வரும் வழி​யிலேயே அவர் உயி​ரிழந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர். பின்​னர், கீழையூர் போலீஸார் மோகன்​ராஜு உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x