Published : 13 Jul 2025 01:27 AM
Last Updated : 13 Jul 2025 01:27 AM

திருவாரூர் அருகே கடன் விவகாரம்: போலீஸாரால் விசாரிக்கப்பட்ட​வர் தீக்குளித்து தற்கொலை

​திரு​வாரூர்: திரு​வாரூர் மாவட்​டம் பேரளம் அரு​கே​யுள்ள சிறு​புலியூரை சேர்ந்​தவர் சிங்​கார​வேலு(48). வெல்​டிங் பட்​டறை நடத்தி வந்​தார். இவர், பாவட்​டக்​குடியைச் சேர்ந்த சுப்​பிரமணி​யனிடம் ரூ.60 ஆயிரம் கடன் வாங்​கி​யுள்​ளார்.

அசல் தொகை​யில் ரூ.35 ஆயிரத்தை திருப்​பிக் கொடுத்​து​ விட்ட நிலை​யில், மீதிப் பணத்தை வட்​டி​யுடன் சேர்த்து தரு​மாறு கூறி, சிங்​கார​வேலுவை சுப்​பிரமணி​யன் தரப்​பினர் கடந்த 6-ம் தேதி தாக்​கி​யுள்​ளனர்.

இதுகுறித்த புகாரின்​பேரில் இரு தரப்​பினரை​யும் அழைத்து பேரளம் போலீ​ஸார் விசாரணை நடத்​தினர். அதன்​பின், மறு​நாள் காலை தனது வெல்​டிங் பட்​டறை​யில், சிங்​கார​வேலு தின்​னரை உடலில் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார். இதில் பலத்த காயமடைந்த அவர், தஞ்​சாவூர் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இதனிடையே, சுப்​பிரமணி​யன் தரப்​பைச் சேர்ந்த செந்​தில்​(48), விஜயன்​(50) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​நிலை​யில், சிகிச்சை பலனின்றி சிங்​கார ​வேலு நேற்று உயி​ரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு ஆம்​புலன்​சில் கொண்டு வரப்​பட்​ட​போது, பேரளம் கடைவீ​தி​யில் ஆம்புலன்சை மறித்த உறவினர்​கள், காவல் ஆய்​வாளர் திட்​டிய​தால்​தான் சிங்​கார​வேலு தற்​கொலை செய்து கொண்​ட​தாக​வும், அவர் மீது வழக்​குப் பதிவு செய்​யக் கோரி​யும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக போலீ​ஸார் உறு​தி​ அளித்​ததால்​ அவர்​கள்​ கலைந்​து சென்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x