Published : 13 Jul 2025 01:25 AM
Last Updated : 13 Jul 2025 01:25 AM

தஞ்சாவூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு

உயிரிழந்த ஜஸ்வந்த், பாலமுருகன், மாதவன்.

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் அருகே குளத்​தில் குளிக்​கச் சென்ற 3 சிறு​வர்​கள் நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​வேங்கட உடை​யான்​பட்டி கீழத் தெரு​வைச் சேர்ந்​தவர்​கள் செந்​தில்மகன் பால​முரு​கன்​(10), கனக​ராஜ் மகன் மாதவன்​(10), ஸ்ரீதர் மகன் ஜஸ்​வந்த்​(8). அதே ஊரில் உள்ள அரசு தொடக்​கப் பள்​ளி​யில் பால​முரு​கன், மாதவன் ஆகியோர் 5-ம் வகுப்​பும், ஜஸ்​வந்த் 3-ம் வகுப்​பும் படித்து வந்​தனர். நேற்று முன்​தினம் பள்​ளிக்​குச் சென்ற இவர்​கள் இரவாகி​யும் வீடு திரும்​பாத​தால், குடும்​பத்​தினர் மற்​றும் ஊர் மக்​கள் அவர்​களை தேடினர்.

அப்​போது, மருதக்​குடி பிள்​ளை​யார் கோ​யில் குளத்​தின் கரை​யில் 3 சிறு​வர்​களின் ஆடைகள், புத்​தகப்பை மற்​றும் செருப்​பு​கள் கிடந்​தன. கிராம மக்​கள் குளத்​தில் இறங்கி தேடியபோது, பால​முரு​கன், மாதவன், ஜஸ்​வந்த் ஆகியோர் தண்​ணீரில் மூழ்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது. அவர்​களது சடலங்​களை மீட்ட போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், இதுகுறித்து வல்​லம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர்.

ரூ.3 லட்​சம் நிவாரணம்: முதல்​வர் மு.க.ஸ்​டாலின் நேற்று வெளி​யிட்​டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயி​ரிழந்த சிறு​வர்​களின் பெற்​றோர்​களுக்​கும், அவர்​களின் உறவினர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தல்​களை​யும் தெரி​வித்​துக்​கொள்​கிறேன். அவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.3 லட்​சம் முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன். இவ்வாறு முதல்வர் தெரி​வித்​துஉள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x