Published : 13 Jul 2025 01:14 AM
Last Updated : 13 Jul 2025 01:14 AM

அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு

சிவகங்கை: ​திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் (29) போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில், திருப்​புவனம் போலீ​ஸாரின் எஃப்ஐஆர் அடிப்​படை​யில், அஜித்​கு​மார் உயி​ரிழப்பை சிபிஐ சிறப்பு குற்​றப் பிரிவு டிஎஸ்பி மோகித்​கு​மார், கொலை வழக்​காக பதிவு செய்​து, விசா​ரணையை தொடங்​கி​னார். வழக்கு தொடர்​பான முழு விவரங்​களை குற்​றப்​பத்​திரி​கை​யில்​ சிபிஐ தெரிவிக்​கும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x