Published : 11 Jul 2025 06:16 AM
Last Updated : 11 Jul 2025 06:16 AM

சென்னை | போதை பொருள் வழக்கில் மருத்துவர் கைது

ஈஸ்வர்

சென்னை: சென்​னை​ அரும்​பாக்​கம் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் கடந்த மாதம் 30-ம் தேதி அரும்​பாக்​கம், வல்​ல​வன் ஓட்​டல் அருகே கண்​காணித்​தனர். அப்​போது, அங்கு சட்​ட​விரோத​மாக மெத்​த​பெட்​டமைன் போதைப் பொருள் வைத்​திருந்த அந்​தோணி ரூபன் (29), தீபக்​ராஜ் (25) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

அவர்​கள் கொடுத்த தகவலின்​பேரில் கடந்த 2-ம் தேதி இமானுவேல் ரோஹனும் (23), மறு​நாள் வளசர​வாக்கம் அரவிந்த் பாலாஜி (31), ஐயப்​பந்தாங்​கல் சுபாஷ் (30) ஆகிய மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த 5-ம் தேதி கோடம்​பாக்​கம் அஜித் கண்​ணன் (30) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.

இதன் தொடர்ச்​சி​யாக 7-வது நபராக நேற்று முன்​தினம் விரு​கம்​பாக்​கம், சின்​மயா நகரைச் சேர்ந்த ஈஸ்​வர் (27) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார். விசா​ரணை​யில், ஈஸ்​வர் ரஷ்​யா​வில் எம்​பிபிஎஸ் படித்து முடித்​து​விட்​டு, சென்​னை​யில் உள்ள தனி​யார் இன்​சூரன்ஸ் நிறு​வனத்​தில் கிளைம் மருத்​து​வ​ராக பணிபுரிந்து வரு​வதும், இவர் ஏற்​கெனவே கைதான இமானுவேல் ரோஹனிடம் மெத்​த​பெட்​டமைன் போதைப்​பொருள் வாங்​கியதும் தெரிய​வந்​தது. தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்று வரு​வ​தாக போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x