Published : 11 Jul 2025 08:54 AM
Last Updated : 11 Jul 2025 08:54 AM

சென்னை | மூதாட்​டி​யிடம் நகை மோசடி செய்​தவர் கைது

சென்னை: மேற்கு மாம்​பலத்​தில் வசிப்​பவர் சூரி (70). இவர் அதே பகு​தி​யில் உள்ள சிவன்​மலை ஆண்​ட​வர் கடை எதிரில் உள்ள பூக்​கடை​யில் வேலை செய்து வரு​கிறார். கடந்த 1-ம் தேதி மாலை வழக்​கம்​போல் மூதாட்டி சூரி பூக்​கட்​டிக் கொண்​டிருந்​தார். அப்​போது டிப்​-​டாப் உடை அணிந்​து வந்த நபர் மூதாட்டியிடம், அரசின் முதி​யோர் உதவித் தொகை ரூ.1000 பெற்​றுத் தரு​வதாகவும், அதற்கு பூக்​கட்​டு​வது​போல் வீடியோ எடுக்க வேண்​டும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து வீடியோவுக்கு தயா​ரான மூதாட்​டி​யிடம், “நீங்​கள் நகை அணிந்திருந்​தால் உதவித்​தொகை கிடைக்​காது. அதை கழற்றி கொடுங்​கள்” எனத் தெரி​வித்​துள்​ளார். இதை நம்​பிய மூதாட்டி அவர் அணிந்​திருந்த 2 தங்​கக் கம்​மல் மற்​றும் ஒரு மூக்​குத்தி ஆகிய​வற்றை கழற்றி அந்த நபரிடம் கொடுத்​துள்​ளார். இதையடுத்து வீடியோ எடுப்​பது​போல் பாவனை செய்த அந்த நபர் அங்​கிருந்து நைசாக நழு​விச் சென்​றார்.

தான் ஏமாற்​றப்​பட்​டதை அறிந்த மூதாட்​டி, இது தொடர்​பாக அசோக் நகர் போலீஸில் புகார் அளித்​தார். போலீ​ஸார் இவ்வழக்கில் வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஷேக் அயூப் (37) என்​பவரை நேற்று முன்​தினம் கைது செய்​தனர். விசா​ரணை​யில், ஷேக் அயூப் மீது ஏற்​கெனவே 7 குற்ற வழக்​கு​கள் உள்​ளது தெரிய​வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்​. தொடர்ந்​து வி​சா​ரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x