Published : 10 Jul 2025 06:58 AM
Last Updated : 10 Jul 2025 06:58 AM

சென்னை | போலி ஆவணம் தயார் செய்து வங்​கி​யில் வீட்டு கடன் பெற்று நூதன மோசடி!

சென்னை: சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யின் கிளை மேலா​ளர் சுகன்யா (35) சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் மனு ஒன்றை அளித்​திருந்​தார்.

அதில், “2019-ம் ஆண்டு எங்​களது வங்​கி​யில் கொல்​கத்​தாவை தலை​மை​யிட​மாகக் கொண்​டு, சென்​னை​யிலும் இயங்​கிவரும் தனி​யார் கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர்​கள் காட்​டாங்​குளத்​தூர் பகு​தி​யில் கட்​டப்​பட்​டிருந்த அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் உள்ள 2 வீடு​களை வாடிக்​கை​யாளர்​களுக்கு விற்​பனை செய்​ததை மறைத்​து, கதவு எண்​களை மாற்​றி, போலி​யான ஆவணங்​களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்​து, எங்​களது வங்​கி​யில் போலி​யான ஆவணங்​களை சமர்ப்​பித்து ரூ.60 லட்​சம் வீட்​டுக் கடன் பெற்றனர்.

அதை திருப்பி செலுத்​தாமல் ஏமாற்​றி​விட்​டனர். எனவே, சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்​யப்​பட்ட பணத்தை பெற்​றுத் தர வேண்​டும்” எனப் புகாரில் தெரி​வித்து இருந்​தார். அதன்​படி, மத்​திய குற்​றப்​பிரி​வில் உள்ள வங்கி மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

விசா​ரணை​யில் சம்​பந்​தப்​பட்ட கட்​டு​மான நிறுவன பங்​கு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான வண்​டலூரைச் சேர்ந்த தேர்​விஜயன் (63) அவரிடம் வீடு வாங்​குபவர்​களுக்கு போலி​யான ஆவணங்​களை தயார் செய்து கொடுத்து வங்​கி​யில் சமர்ப்​பித்து வீட்​டுக் கடன் பெற்று அதை வங்​கிக்கு திரும்​பச் செலுத்​தாமல் சுய​லாபம் பெறும் நோக்​கத்​துடன் வங்கி மற்​றும் பொது​மக்​களின் பணத்தை மோசடி செய்து சட்ட விரோத​மாக ரூ.73 லட்​சத்து 77,416 கையாடல் செய்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த தேர்​விஜயனை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இந்த மோசடி வழக்​கில் தலைமறை​வாக உள்ள மேலும் சிலரை போலீ​ஸார் தொடர்ந்​து தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x