Published : 09 Jul 2025 05:58 AM
Last Updated : 09 Jul 2025 05:58 AM

நாகர்கோவில் | பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மத போதகர் கைது

போதகர் ரெஜிமோன்

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டம் தக்​கலை பகு​தி​யைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்​ணுக்கு இரு ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மண​மானது. ஆனால், அவருக்கு குழந்​தைகள் இல்​லை. உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால், சில மாதங்​களுக்கு முன்பு அவரது தாயார் வீட்​டுக்கு சென்​றார்.

இந்​நிலை​யில், உறவினர்​கள் ஆலோ​சனை​யின் பேரில் மேக்​காமண்​டபம் பகு​தி​யில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு அந்​தப் பெண் சென்​றுள்​ளார். சபை போதகர் ரெஜிமோன்​(43) என்​பவர், பெண்​ணின் நோய் குண​மாக தனிமை​யில் ஜெபம் செய்ய வேண்​டும் என்று கூறி​யுள்​ளார்.

இதை நம்​பிய பெற்​றோர், மகளை மட்​டும் ஜெபம் செய்ய அனுப்​பி​யுள்​ளனர். அப்​போது போதகர் ரெஜிமோன், பெண்ணை பலாத்​காரம் செய்ய முயன்​றுள்​ளார். அந்​தப் பெண் போதகரின் பிடியி​லிருந்து தப்​பித்து வெளியே ஓடி வந்​துள்​ளார்.

பின்​னர் இது தொடர்​பாக தக்​கலை காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, போதகர் ரெஜிமோனை கைது செய்​து, நாகர்​கோ​வில் சிறை​யில் அ.டைத்​தனர். இந்​நிலை​யில், போதகர் ரெஜிமோன் மீது மேலும் பல பாலியல் புகார்​கள் வந்​துள்​ளன. தொடர்ந்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x