Published : 06 Jul 2025 01:13 AM
Last Updated : 06 Jul 2025 01:13 AM

பிரபல யூடியூபர் மீது வரதட்சணை வழக்கு

தேனி: தேனி வீர​பாண்டி முல்லை நகரைச் சேர்ந்த கண்​ணன் மகள் விமலா தேவி (28). மதுரை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வ​ராகப் பணிபுரிந்​தார். அப்​போது, ஒத்​தக்​கடையைச் சேர்ந்த யூடியூபர் சுதர்​சனுடன் பழக்​கம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, அவர்​களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி திரு​மணம் நடை​பெற்​றது.

இந்​நிலை​யில், தேனி அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் விமலாதேவி புகார் அளித்​தார். அதில், “திரு​மணத்​தின்​போது 30 பவுன் நகை​யும், ரூ.5 லட்​ச​மும் வரதட்​சணை​யாக வழங்​கப்​பட்​டது. 30 பவுன் நகையை விற்​றதுடன், மேலும் ரூ.10 லட்​சம் கேட்டு வாங்​கினர். தற்​போது, கூடு​தலாக 20 பவுன் நகை கேட்டு கணவர் குடும்​பத்​தினர் துன்​புறுத்​துகின்​றனர்” என்று தெரி​வித்​திருந்​தார். இதையடுத்​து, சுதர்​சன், அவரது தந்தை சுந்​தர்​ராஜன், தாயார் மாலதி உள்​ளிட்ட 5 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x