Published : 05 Jul 2025 06:02 AM
Last Updated : 05 Jul 2025 06:02 AM

சிறு​வன் கொலை வழக்​கில் கல்​லூரி மாணவி உட்பட 3 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி: சிறுவன் கொலை வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் அஞ்​செட்டி அரு​கே​யுள்ள மாவனட்டி கிராமத்​தைச் சேர்ந்த சிவ​ராஜ் மகன் ரோஹித் (13). அங்​குள்ள அரசுப் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு பயின்று வந்த இச்​சிறு​வன் நேற்று முன்​தினம் திரு​மொடுக்கு கீழ்​பள்​ளத்​தில் சடல​மாக மீட்​கப்​பட்​டார்.

இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, மாவனட்​டியைச் சேர்ந்த மாதேவன் (21), கர்​நாடக மாநிலம் ராம்​நகர் மாவட்​டம் உனுசனஅள்​ளியைச் சேர்ந்த மற்​றொரு மாதேவன் (21) மற்​றும் ஒரு கல்​லூரி மாணவி ஆகியோரைக் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “மாவனட்டி மாதேவனும், ஒரு கல்​லூரி மாண​வி​யும் தனிமை​யில் பேசிக் கொண்​டிருந்​ததை ரோஹித் பார்த்​த​தால், இரு​வரும் மற்​றொரு மாதேவனுடன் சேர்ந்து சிறு​வனைக் கொன்​றுள்​ளனர்” என்​றனர்.

தலைமை காவலர்​ இடமாற்றம்: மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தங்​கதுரை கூறும்​போது, “இவ்​வழக்​கில் போலீ​ஸார் எங்​கும் அலட்​சி​ய​மாக செயல்​பட​வில்​லை. புகார் அளிக்க வந்​தவர்​களிடம் ‘நீ பெரிய கோடீஸ்​வர​னா’ என தலைமை காவலர் ஒரு​வர் கேட்​ட​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, தலை​மைக் காவலர் சின்​னதுரையை ஆயுதப்​படைக்கு மாற்றி உத்​தர​விட்​டுள்​ளோம்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x