Published : 05 Jul 2025 05:58 AM
Last Updated : 05 Jul 2025 05:58 AM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு

செந்தில்குமார்

ஊட்டி: அரசுப் பள்ளி மாணவி​களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள ஹோப் பார்க் பகு​தியை சேர்ந்​தவர் செந்​தில்​கு​மார் (50). இவர் 23 ஆண்​டு​களாக அறி​வியல் ஆசிரிய​ராக பல்​வேறு அரசுப் பள்​ளி​களில் பணி​யாற்றி உள்​ளார். இந்​நிலை​யில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசுப் பள்​ளி​யில் பணி​யில் சேர்ந்​தார்.‌ அங்கு 6 முதல் 9 வகுப்பு வரை அறி​வியல் பாடம் எடுத்​துள்​ளார்.

சில நாட்​களுக்கு முன்​னர் அந்​தப் பள்​ளிக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​து​வதற்​காக போலீ​ஸார் சென்​றனர். பயிற்சி வகுப்பு முடிந்​ததும்
6-ம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி ஒரு​வர், அறி​வியல் ஆசிரியர் செந்​தில்​கு​மார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக புகார் கூறி​யுள்​ளார். தொடர்ந்து பல மாணவி​களும் அவர் மீது புகார் தெரி​வித்​தனர். பின்​னர், ஆசிரியர் செந்​தில்​கு​மார் பாலியல் தொல்லை கொடுத்​த​தாக 21 மாணவி​கள் புகார் அளித்​தனர்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த போலீ​ஸார், இதுகுறித்து உயர​தி​காரி​களுக்​கும், குழந்​தைகள் நலப் பிரிவு அதி​காரி​களுக்​கும் தகவல் தெரி​வித்​தனர். தொடர்ந்​து, ஊட்டி ஊரக காவல் ஆய்​வாளர் விஜயா தலை​மையி​லான போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, போக்சோ சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்து செந்​தில்​குமரை கைது செய்​தனர். இந்​நிலை​யில், ஆசிரியர் செந்​தில்​கு​மார் தற்​காலிக பணி நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக முதன்மை கல்வி அலு​வலர் நந்​தகு​மார் தெரி​வித்​தார்.

அவர் கூறும் போது, ‘பாலியல் புகாரில் கைதாகி​யுள்ள ஆசிரியர்செந்​தில்​கு​மார் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளார். ஆசிரியர்​களுக்கு விழிப்​புணர்வு மற்​றும் கவுன்​சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x