Published : 05 Jul 2025 05:47 AM
Last Updated : 05 Jul 2025 05:47 AM

ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியார் கைது

திருப்பூர்: அ​வி​நாசி இளம் பெண் ரிதன்யா தற்​கொலை வழக்​கில், அவரது மாமி​யார் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனை சேர்ந்​தவர் கவின்​கு​மார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 3 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடந்த நிலை​யில், கடந்த 28-ம் தேதி மொண்​டி​பாளை​யம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்​கொலை செய்​து​கொண்​டார்.

இறப்​ப​தற்கு முன்​பாக ரிதன்​யா, கணவர் மற்​றும் குடும்​பத்​தினர் மீது குற்​றம் சாட்டி தனது தந்தை அண்​ணாதுரைக்கு அனுப்​பிய வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, ரிதன்​யா​வின் கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் மீது துன்​புறுத்​தல் மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டு​தல் ஆகிய பிரிவு​களின் கீழ் சேவூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்​தியை கைது செய்​தனர். சித்​ராதே​வியை உடல்​நிலையை காரணம் காட்டி கைது செய்​ய​வில்​லை.

வழக்​கில் அரசி​யல் அழுத்​தம் இருப்​ப​தால் சித்​ராதே​வியை கைது செய்​ய​வில்லை என்று ரிதன்​யா​வின் குடும்​பத்​தினர் குற்​றம்​சாட்டி வந்த நிலை​யில், மாமி​யார் சித்​ராதேவி நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

எஸ்​.பி.​யுடன் தந்தை சந்​திப்பு: இந்​நிலை​யில், ரிதன்​யா​வின் தந்தை அண்​ணாதுரை மற்​றும் உறவினர்​கள் திருப்​பூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரிஷ் யாதவை நேற்று சந்​தித்​து, பல்​வேறு கோரிக்​கைகளை முன் வைத்​தனர். தொடர்ந்து அண்​ணாதுரை செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரை சந்​தித்து கோரிக்கை வைத்​தோம். பெண் பாதிப்பு தொடர்​பாக, பொது​மக்​கள் யாரேனும் அறிந்​திருந்​தால், அவர்​களும் வந்து தகவல் அளிக்​கலாம். அதை​யும் விசா​ரிக்​கத் தயா​ராக இருப்​ப​தாக எஸ்​.பி.தெரி​வித்​துள்​ளார். மகள் தற்​கொலைக்கு காரண​மானவர்​களுக்கு தூக்கு தண்​டனை பெற்​றுத்தர தர வேண்​டும்” என்​றார்.

இதற்​கிடை​யில், கவின்​கு​மார், ஈஸ்​வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் தொடர்​பான மனுவை திருப்​பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன் விசா​ரித்​தார். அப்​போது, கவின்​கு​மார் தரப்​பில் காலஅவ​காசம் கேட்​ட​தால், விசா​ரணையை வரும் 7-ம் தேதிக்கு நீதிபதி தள்​ளிவைத்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x