Published : 04 Jul 2025 01:32 AM
Last Updated : 04 Jul 2025 01:32 AM

கள்ளக்குறிச்சி அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி: சங்​க​ராபுரம் அருகே முதிய தம்​ப​தியை கட்​டிப்​போட்டு 200 பவுன் நகைகளை கொள்​ளை​யடித்​துச் சென்​றவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சங்​க​ராபுரத்தை அடுத்த கடு​வனூர் கிராமத்​தைச் சேர்ந்த கேசரிவர்​மன் என்​பவர், குடும்​பத்​தினருடன் வெளி​நாட்​டில் வேலை செய்து வரு​கிறார். தனது 2-வது மகளுக்கு பூப்​பனித நீராட்டு விழா நடத்​து​வதற்​காக கடந்த மாதம் கடு​வனூர் திரும்​பி​னார். வரும் 7-ம் தேதி விழா நடை​பெற​விருந்த நிலை​யில், தனது பாஸ்​போர்ட்டைபுதுப்​பிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் குடும்​பத்​தினருடன் சென்னை சென்​றுள்​ளார்.

வீட்​டில் அவரது தந்தை முனியன், தாய் பொன்​னம்​மாள் ஆகியோர் மட்​டுமே இருந்​தனர். இந்​நிலை​யில், நேற்று அதி​காலை வீட்​டின் பின்​பக்க கதவு வழி​யாக
நுழைந்த மர்ம நபர்​கள், முனியன், பொன்​னம்​மாளை தாக்கி கட்​டிப் போட்​டு, தனி அறை​யில் அடைத்​தனர். மேலும், மற்​றொரு அறை​யில் இருந்த பீரோவை உடைத்​து, அதிலிருந்த நகைகளை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

பின்​னர் வீடு திரும்​பிய கேசரிவர்​மன் இதுகுறித்து சங்​க​ராபுரம் போலீ​ஸில் புகார் செய்​தார். காவல்ஆய்​வாளர் விநாயக​முரு​கன் தலை​மையி​லான போலீ​ஸார் கொள்ளை நடந்த வீட்​டைப் பார்​வை​யிட்​டனர். சுமார் 200 பவுன் நகைகள் கொள்​ளை​போன​தாக புகார் அளித்​திருப்​ப​தாக காவல் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இது தொடர்​பாக போலீ​ஸார்வழக்கு பதிவு செய்​து, கொள்​ளை​யர்​களைத் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x